bredcrumb

Rasi Palan: துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!

By Chandru
| Updated: Monday, August 2, 2021, 09:03 [IST]
Rasi Palan: துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
Rasi Palan:  துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
1/12
மேஷம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.குடும்பத்தில் நல்ல செய்திகள் தேடி வரும் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பொருளாதார பிரச்சினைகள் குறையும்.
Rasi Palan:  துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
2/12
ரிஷபம்:

சந்திரன் உங்கள் ராசிக்குள் வருகிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
Rasi Palan:  துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
3/12
மிதுனம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவு செய்வீர்கள். சிக்கனமாக செலவு செய்யவும். பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் பெண்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.
Rasi Palan:  துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
4/12
கடகம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். இன்று நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். கடனாக கொடுத்த பணம் வசூலாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.
Rasi Palan:  துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
5/12
சிம்மம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

Rasi Palan:  துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
6/12
கன்னி:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.  பெண்களால் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வங்கியில் சேமிப்பு உயரும். புதிய பொருட்கள் வாங்க நல்ல நாளாகும்.
Rasi Palan:  துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
7/12
துலாம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. சுபகாரிய நிகழ்ச்சிகள் மற்றும் தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இன்றைய தினம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம். உடலில் மந்த நிலையும் சோர்வும் ஏற்படும்.
Rasi Palan:  துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
8/12
விருச்சிகம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.
Rasi Palan:  துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
9/12
தனுசு:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X