bredcrumb

Rasi Palan: தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!

By Chandru
| Published: Monday, August 9, 2021, 08:39 [IST]
Rasi Palan: தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
Rasi Palan: தனுசு, மகரம்  ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
1/12
மேஷம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமான நிலையில் பயணம் செய்வதால் இன்று இல்லத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்க நல்ல நாள். வியாபாரத்தில்  பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.
Rasi Palan: தனுசு, மகரம்  ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
2/12
ரிஷபம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டிலும் நான்காவது வீட்டிலும் பயணம் செய்கிறார்.இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் பெருமைப்படும் படி நடந்து கொள்வார்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
Rasi Palan: தனுசு, மகரம்  ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
3/12
மிதுனம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சாதகமான இடத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.
Rasi Palan: தனுசு, மகரம்  ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
4/12
கடகம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் காலை 10 மணி வரை பயணம் செய்கிறார். இன்று புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
Rasi Palan: தனுசு, மகரம்  ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
5/12
சிம்மம்:

சந்திரன் உங்கள் ராசிக்குள் இன்று பயணம் செய்யப்போகிறார். மனதில் நிம்மதி அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். இன்று குடும்பத்தில் சாதகமற்ற சூழ்நிலை உருவாகும். நெருங்கியவர்கள் மூலம் வீண் பிரச்சினைகள் வரலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்
Rasi Palan: தனுசு, மகரம்  ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
6/12
கன்னி:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருவதால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். சுப செலவுகள் அதிகரிக்கும்.
Rasi Palan: தனுசு, மகரம்  ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
7/12
துலாம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருவதால் தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
Rasi Palan: தனுசு, மகரம்  ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
8/12
விருச்சிகம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்திற்கு வருவதால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். இன்று நீங்கள் எந்த செயலையும் செய்து முடிக்க கடின உழைப்பு தேவை. வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களால் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்
Rasi Palan: தனுசு, மகரம்  ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
9/12
தனுசு:

சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு பகல் 09.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமை தேவை. இன்று பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பிற்பகலுக்குப் பிறகு சுப முயற்சிகளை செய்வது நல்லது. வீட்டில் இருந்த பிரச்சினைகள் குறையும். மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X