bredcrumb

Rasi Palan: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!

By Chandru
| Published: Wednesday, August 18, 2021, 09:24 [IST]
Rasi Palan: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
Rasi Palan: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
1/12
மேஷம்:

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். நிறைய அதிர்ஷ்டங்கள் நிறைந்த நாள்.  வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 3 கிரகங்கள் இணைந்துள்ளதால் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப காரியங்கள் தொடர்பாக நல்ல செய்திகள் தேடி வரும்.
Rasi Palan: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
2/12
ரிஷபம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் வேலையில் கவனம் தேவை.இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இன்று பண முதலீடுகளைத் தவிர்க்கவும்.
Rasi Palan: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
3/12
மிதுனம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரனின் பார்வை கிடைப்பதால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். இன்று உறவினர்களால் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
Rasi Palan: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
4/12
கடகம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்.
Rasi Palan: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
5/12
சிம்மம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசியில் மூன்று கிரகங்கள் கூடியுள்ளதால் இன்று நீங்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். வெளியிலிருந்து வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.
Rasi Palan: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
6/12
கன்னி:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார்.இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வங்கி சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.
Rasi Palan: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
7/12
துலாம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் நீங்கும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.
Rasi Palan: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
8/12
விருச்சிகம்:

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுக்கு பண அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
Rasi Palan: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
9/12
தனுசு:

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X