bredcrumb

Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!

By Chandru
| Updated: Saturday, August 21, 2021, 11:06 [IST]
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
1/12
மேஷம்: ராசிக்கு பத்தாவது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். தொழில் செய்யும் இடத்தில் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும்.  உடல் நலம் சீராக இருக்கும், பொருளாதார வளம் சிறக்கும். மணவாழ்க்கை, காதல் நினைவுகள் இன்றைக்கு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
2/12
ரிஷபம்: ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உடல் நலமும் பொருளாதார நலனும் நன்றாக இருக்கும்.  புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும். உடல் நிலையில் இருந்த மந்தநிலை மாறும் சுறுசுறுப்பு அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடிவுக்கு வரும். தடை தாமதங்கள் நீங்கும்.
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
3/12
மிதுனம்: ராசிக்கு எட்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். சந்திராஷ்டமம் உள்ளதால் இடம் பொருள் அறிந்து பேசுவது நல்லது. வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். பிறருடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் வம்பு வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகளை நீங்களாக ஆரம்பிக்க வேண்டாம். பணிபுரியும் இடங்களில் நிதானத்துடன் செயல்படவும். பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும்.
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
4/12
கடகம்:  உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. இன்று மிக அற்புதமான நாள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கொடுத்த கடன் வசூலாகும். உங்களின் கடன் பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
5/12
சிம்மம்: ராசிக்கு ஆறாவது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளதால் எதிர்பாராத பணவரவு இன்றைக்கு உண்டு. உங்களின் உடல் நலம் நன்றாக இருக்கும். இன்றைக்கு திடீர் யோகம் ஏற்படும் நாள். காதல் துணையுடனான நேரங்களை திகட்ட திகட்ட அனுபவிப்பீர்கள். தாய்மாமன் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டில் இன்றைய தினம் உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
6/12
கன்னி: ராசிக்கு ஐந்தாவது வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். பூர்வீக சொத்துக்களை விற்க முயற்சி செய்வீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சி செய்வீர்கள். உங்களின் முகப்பொலிவு கூடும். வாழ்க்கைத்துணையுடன்  மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். திடீர் பணம் வரவு அதிகரிக்கும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
7/12
துலாம்:  சந்திரன் உங்களுடைய ராசிக்கு நான்காவது வீட்டில் பயணம் செய்வதால் அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. பணப்பற்றாக்குறை நீங்கும். இருந்தாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இன்றைக்கு வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் சுபச் செய்திகள் தேடி வரும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். அலுவலகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
8/12
விருச்சிகம்: ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.  பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நெருங்கிய உறவினர்களிடம் பேசும் போது நிதானம் தேவை.
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
9/12
தனுசு: ராசிக்கு இரண்டாவது வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். பண வருமானம் அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் செயலுக்கு புகழும் அங்கீகாரமும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள்,குழப்பம் நீங்கி நிம்மதி எற்படும் நாள். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். செய்யும் தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X