தியேட்டரில் இன்று ரிலீசாகும் திரைப்படங்கள்.. என்னென்ன? முழு லிஸ்ட்!
இன்று மார்ச் 6ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடம்'. நட்டி நட்ராஜன், முனீஷ்காந்த், பால சரவணன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ், சுரேஷ் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'முஸ்தபா முஸ்தபா'. மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் மதுமகேஷ், அர்ஜுன் அசோகன், ஜியா சங்கர், எம்எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதல் ரீசெட் ரிப்பீட்'. இப்படம் இன்று தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி ப்ரியா, கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஓ பட்டர்பிளை'. இப்படம் இன்று தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ரட்சித்தா மஹாலட்சுமி, எம்எஸ் மூர்த்தி, சபரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '99/66'. இப்படம் இன்று தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் ஸ்ரீதேவா ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ள திரைப்படம் 'வசூல் மன்னன்'. இப்படம் இன்று தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
பால் ராஜ் இயக்கத்தில் காயத்ரி ரேமா, ஸ்வேதா ஸ்ரீ, ரவி மரியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'யார்ரா அந்த பையன் நான் தா அந்த பையன்'. இப்படம் இன்று தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications