சர்வதேச நாணய நிதியிடம் (IMF) அதிக கடன் வாங்கிய நாடுகள்.. பட்டியலில் இந்தியாவின் பக்கத்து நாடுகள்.. டாப் 10 லிஸ்ட்!
சர்வதேச நாணய நிதியம் (IMF) என்பது 189 உறுப்பு நாடுகளை கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தி வறுமையை குறைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் உறுப்பு நாடுகளுக்கு நிதி உதவி செய்யும் இந்த IMF அமைப்பிடம் அதிக கடன் வாங்கியுள்ள நாடுகள் என்னென்ன? எவ்வளவு கடன் வாங்கியுள்ளது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சர்வதேச நாணய நிதியிடம் அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் ஆப்பிரிக்க நாடான கானா உள்ளது. வறுமையை ஒலிக்கவும், வளர்ச்சிக்காகவும் IMF-யிடம் சுமார் 2.6 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியிடம் அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் ஆப்பிரிக்க நாடான அங்கோலா உள்ளது. வறுமையில் இருந்து மீண்டு வர IMF-யிடம் சுமார் 2.7 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியிடம் அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக IMF-யிடம் சுமார் 2.9 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது.
இந்த பட்டியலில் 7ம் இடத்தில் ஆப்பிரிக்க நாடான கென்யா உள்ளது. வறுமையை ஒலிக்கவும், வளர்ச்சிக்காகவும் IMF-யிடம் சுமார் 3 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது.
இந்த பட்டியலில் 6ம் இடத்தில் ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் உள்ளது. அந்நாடு IMF-யிடம் சுமார் 3.1 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது.
இந்த பட்டியலில் 5ம் இடத்தில் ஈக்வடார் நாடு உள்ளது. அந்நாடு IMF-யிடம் சுமார் 6.5 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது.
இந்த பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக IMF-யிடம் சுமார் 6.6 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது.
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் எகிப்து நாடு உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக IMF-யிடம் சுமார் 6.9 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது.
இந்த பட்டியலில் 2ம் இடத்தில் உக்ரைன் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக IMF-யிடம் சுமார் 10.4 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications