Home / Photos
2024-ல் இதுவரை அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட்.. நம்பர் ஒன் எது? தமிழ் படம் இருக்கா?
By Chandru
2024ல் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள் எது எது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/10
Share
மலையாளத்தில் வெளியான பீல் குட் திரைப்படம் பிரேமலு. இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லென், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படம் இதுவரை 131.5 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த டாப் 10 லிஸ்டில் பத்தாம் இடத்தை பிடித்துள்ளது.
2/10
Share
இந்த லிஸ்டில் ஒன்பதாம் இடத்தில் Teri Baaton Mein Aisa Uljha Jiya என்ற திரைப்படம் உள்ளது. இப்படம் இதுவரை 139 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
3/10
Share
இந்த லிஸ்டில் எட்டாம் இடத்தில் உள்ளது Crew திரைப்படம். நடிகை தபு, கரீனா கபூர், கிருதி சனோன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் சுமார் 151.63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
4/10
Share
மலையாளத்தில் வெளியான மற்றொரு ஹிட் படம் ஆவேசம். பகத் பாசில் நடிப்பில் வெளியான பீல் குட் திரைப்படம் இதுவாகும். நடிப்பு அரக்கன் என்ற பெயருக்கு ஏற்றார் போல் தனது அசத்திய நடிப்பினால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர். இப்படம் இதுவரை சுமார் 154.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
5/10
Share
மலையாளத்தின் மற்றொரு சூப்பர் டூப்பர் ஹிட் படம் ஆடு ஜீவிதம். பிரித்விராஜ் நடிப்பில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. பல வருட உழைப்பில் உருவான இப்படம் ரிலீசாகி வசூலை வரி குவித்தது. இதுவரை இப்படம் 157.61 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த லிஸ்டில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.
6/10
Share
ஐந்தாவது இடத்தில் ஷைத்தான் திரைப்படம் உள்ளது. மாதவன், அஜய் தேவகன், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திகில் படம் ஷைத்தான். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் சுமார் 213.79 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
7/10
Share
இந்த டாப் 10 லிஸ்டில் நான்காம் இடத்தில் மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் உள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படம் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலில் மெகா சாதனை படைத்தது. இப்படம் சுமார் 241.03 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
8/10
Share
மூன்றாவது இடத்தை பிடித்த படம் ஹனுமான். தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலக்ஷ்மி சரத்குமார், வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் சும்மர் 295.16 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
9/10
Share
இந்த லிஸ்டில் இரண்டாம் இடத்தை பிடித்த படம் Fighter. பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் சும்மர் 358.89 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications