2026ல் இதுவரை வெளியாகி அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்.. டாப் 10 கலெக்ஷன் படங்கள் இதோ!
2026ல் இதுவரை வெளியாகி அதிகம் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2026ல் இதுவரை வெளியாகி அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் 'யூத்' திரைப்படம் உள்ளது. கென் கருணாஸ் இயக்கி, நடித்த இந்த சின்ன பட்ஜெட் திரைப்படம் உலகளவில் சுமார் 71 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வெறும் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் 9ம் இடத்தில் அருஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம் உள்ளது. 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 75 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 8ம் இடத்தில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், உலகளவில் ரிலீஸாகி வெறும் 85 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. வசூலில் தோல்வி என்றாலும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 7ம் இடத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த 'தாய் கிழவி' திரைப்படம் உள்ளது. 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 82 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த பட்டியலில் 6ம் இடத்தில் லோகேஷ் கனகராஜின் 'DC' திரைப்படம் உள்ளது. 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 110 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்த பட்டியலில் 5ம் இடத்தில் சூரியின் 'மண்டாடி' திரைப்படம் உள்ளது. 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 136 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்த பட்டியலில் 4ம் இடத்தில் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் உள்ளது. இப்படம், உலகளவில் 209 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இந்த பட்டியலில் 3ம் இடத்தை மீண்டும் சூர்யா பிடித்துள்ளார். அவர் நடிப்பில் வெளிவந்த 'கருப்பு' திரைப்படம் உலகளவில் 310 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து ஹிட்டானது.
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் உள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் உலகளவில் ரிலீசான இப்படம், மொத்தம் 324 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.



Click it and Unblock the Notifications