Home / Photos
ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம்..! இந்தியாவின் டாப் 10 காஸ்ட்லி வில்லன்களின் லிஸ்ட்.. தமிழ் நடிகர்கள் இருக்காங்களா?
By Chandru
திரைப்படங்களில் ஹீரோ கதாபாத்திரத்துக்கு எவ்வளவு முக்கியத்தும் கொடுக்கப்படுகிறதோ அதே அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்திக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஹீரோவோவை மாஸாக காட்ட தரமான வில்லன் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். வில்லனை திட்டித்தீர்த்த காலம் போய் தற்போது வில்லன் கதாபாத்திரத்தை கொண்டாடும் அளவுக்கு வில்லன் கதாபாத்திரங்களை அதிகம் ரசிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஹீரோக்களுக்கு நிகராக அதிகம் சம்பளம் வாங்கிய வில்லன்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Share
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் நவாஸுதீன் சித்திக். இவர் சைந்தவ் என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க 8 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.
2/8
Share
பாலிவுட் நடிகர் பாபி தியால், NBK 109 என்ற தெலுங்கு படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிக்க 8 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
3/8
Share
மலையாள நடிகர் பகத் பாசில், தெலுங்கு படமான புஷ்பா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க 8 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இவரின் வில்லனிசம் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.
4/8
Share
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கேஜிஎப் படத்தில் நடிகர் யாஷுக்கு வில்லனாக நடிக்க சுமார் 10 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளாராம். அதேபோல் அப்படத்தில் இவரின் வில்லனிசம் செம மிரட்டலாக அமைத்திருக்கும்.
5/8
Share
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், ஆதிபிருஷ் படத்தில் இராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க சுமார் 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.
6/8
Share
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'கேம் ஜெஞ்சர்'. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா நடித்து அசத்தியுள்ளாராம். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சுமார் 15 கோடி ரூபாய் சம்பளமாக எஸ்ஜே சூர்யா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
7/8
Share
ஷாரூக்கான் நடிப்பில் கடந்தாண்டு வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பார். மேலும் இவருக்கு 21 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
8/8
Share
இந்தியாவின் நம்பர் ஒன் காஸ்ட்லி வில்லனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட கல்கி 2898 AD திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு சுமார் 25 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் காஸ்ட்லி வில்லனாக அறியப்படுகிறார்.


Click it and Unblock the Notifications