Year Ender 2025: யூடியூபில் அதிக வியூஸ் அள்ளிய ட்ரெண்டிங் தமிழ் பாடல்கள்.. டாப் 10 லிஸ்ட்!
2025ல் யூடியூப் தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய ட்ரெண்டிங் தமிழ் பாடல்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ரஜினியின் 'கூலி' படத்தில் அனிருத் இசையில் வெளிவந்த "மோனிகா" பாடல் உலகளவில் செம ட்ரெண்டானது. அப்பாடல் யூடியூப் தளத்தில் 314 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து 2025ம் ஆண்டில் அதிக வியூஸ் அள்ளிய படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த 'நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்' படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்த "கோல்டன் ஸ்பாரோ" பாடல் சோசியல் மீடியாக்களில் செம ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. அதன்படி இப்பாடல் யூடியூபில் சுமார் 244 மில்லியன் வியூஸ் பெற்று இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த 'ரெட்ரோ' படத்தில் இடம்பெற்ற "கனிமா" பாடல் பட்டித்தொட்டி எங்கும் செம ட்ரெண்டிங்காக வலம் வந்தது. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த இப்பாடல் யூடியூபில் 225 மில்லியன் மில்லியன் வியூஸ் பெற்று இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த 'தலைவன் தலைவி' படத்தில் இடம் பிடித்த "பொட்டல முட்டாயே" பாடல் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த இப்பாடல் யூடியூபில் 167 மில்லியன் மில்லியன் வியூஸ் பெற்று இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
ஏஆர் ரகுமான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடிப்பில் வெளிவந்த 'தக் லைஃப்' படத்தில் இடம் பிடித்த "முத்த மழை" பாடல் செம ஹிட்டானது. இப்பாடல் யூடியூபில் 139 மில்லியன் மில்லியன் வியூஸ் பெற்று இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சாய் அபயங்கர் இசையில் வெளிவந்த 'ஊரும் பிளட்' பாடல் 2கே கிட்ஸ் சினிமா ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்தது. ட்ரெண்டிங்கில் வலம் வந்த இப்பாடல் , யூடியூபில் 139 மில்லியன் மில்லியன் வியூஸ் பெற்று இந்த பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படத்தில இடம் பிடித்த "வழித்துணையே" பாடல் சோசியல் மீடியாக்களில் வைரலாக வலம் வந்தது. லியோன் ஜேம்ஸ் இசையில் வெளிவந்த இப்பாடல், யூடியூபில் 109 மில்லியன் மில்லியன் வியூஸ் பெற்று இந்த பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது
'தக் லைஃப்' படத்தில் இடம் பிடித்த "ஜிங்குச்சா" பாடல் 8ம் இடத்தை பிடித்துள்ளது. இப்பாடல், யூடியூபில் 96 மில்லியன் மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.
'ரெட்ரோ' படத்தில் இடம் பிடித்த "கண்ணாடி பூவே" இந்த பட்டியலில் 9ம் இடத்தை பிடித்துள்ளது. இப்பாடல், யூடியூபில் 88 மில்லியன் மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications