ஜூன் மாதத்தில் சுற்றுலா செல்ல சூப்பரான இடங்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ!
இந்தியாவில் கோடைக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் பல்வேறு இடங்கள் வெவ்வேறு கால சூழ்நிலை நிலவி வருகிறது. கேரளாவில் கோடை முடிந்து மழை காலம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் கோடை வெப்பம் முடிவுக்கு வராத நிலையிலும் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. வாட மாநிலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக டெல்லியில் அனல் காற்று வீசி ஏராளமானோர் உயிழந்தனர். இப்படி இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கால சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் மே மாதம் முடித்து ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் இந்த மாதத்தில் இந்தியாவுக்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சிறந்த இடம் எது எது என்பது இந்த பதிவில் பார்ப்போம்.
கர்நாடகாவில் உள்ள கூர்க் பகுதிகளில் ட்ரிப் செல்வது சூப்பர் அனுபவமாக இருக்கும். அதிலும் இந்த ஜூன் மாதத்தில் கண்டிப்பாக செல்லவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. குடும்பத்துடனும், நண்பர்களுடனும் செல்ல சிறந்த இடமாக உள்ளது.


Click it and Unblock the Notifications