இந்தியாவின் டாப் 10 பெரும் பணக்காரர்களின் லிஸ்ட்.. அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா?
2025ம் ஆண்டின் ஜூலை மாத நிலவரப்படி, இந்தியாவின் டாப் 10 பெரும் பணக்காரர்களின் படியில் வெளியாகியுள்ளது. டாப் 10 லிஸ்டில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை இந்த பட்டியலில் பார்ப்போம்.
இந்தியாவின் டாப் 10 பெரும் பணக்காரர்களின் லிஸ்ட் 10ம் இடத்தில் DLF நிறுவனத்தின் தலைவர் குஷால் பால் சிங் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 18.1 பில்லியன் டாலராகும்.
இந்த லிஸ்டில் 9ம் இடத்தில் தொழிலதிபர் ராதாகிஷன் தமானி உள்ளார். டி-மார்ட் நிறுவனத்தின் தலைவரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 18.3 பில்லியன் டாலராகும். உலகளவில் உள்ள பணக்காரர்களின் பட்டியலில் 122ம் இடத்தில் உள்ளார்.
இந்த லிஸ்டில் 8ம் இடத்தில் உலோக நிறுவனமான ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மி மிட்டல் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 18.7 பில்லியன் டாலராகும். இந்தியளவில் 8ம் இடத்திலும் உலகளவில் 116வது இடத்திலும் உள்ளார்.
இந்த லிஸ்டில் 7ம் இடத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் பிர்லா உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 22.2 பில்லியன் டாலராகும். இந்தியளவில் 7ம் இடத்திலும் உலகளவில் 95வது இடத்திலும் உள்ளார்.
இந்த லிஸ்டில் 6ம் இடத்தில் சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 25.1 பில்லியன் டாலராகும். இந்தியளவில் 6ம் இடத்திலும் உலகளவில் 81வது இடத்திலும் உள்ளார்.
5ம் இடத்தில் சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் திலீப் ஷங்வி உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 26.4 பில்லியன் டாலராகும். இந்தியளவில் 5ம் இடத்திலும் உலகளவில் 77வது இடத்திலும் உள்ளார்.
4ம் இடத்தில் ஓபி ஜிண்டால் குழுமம் நிறுவனத்தின் தலைவர் சாவித்ரி ஜிண்டால் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 37.3 பில்லியன் டாலராகும். இந்தியளவில் 4ம் இடத்திலும் உலகளவில் 49வது இடத்திலும் உள்ளார்.
3ம் இடத்தில் HCL நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 38 பில்லியன் டாலராகும். இந்தியளவில் 3ம் இடத்திலும் உலகளவில் 48வது இடத்திலும் உள்ளார்.
இரண்டாம் இடத்தில் அதானி நிறுவனத்தின் தலைவர் கெளதம் அதானி உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 67 பில்லியன் டாலராகும். இந்தியளவில் 2ம் இடத்திலும் உலகளவில் 24வது இடத்திலும் உள்ளார்.


Click it and Unblock the Notifications