கோடிகளில் புரளும் தெலுங்கு நடிகைகள்.. நம்பர் ஒன் பணக்கார ஹீரோயின் யாருன்னு தெரியுமா? பட்டியல்!
தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் கோடீஸ்வர நடிகை யார்? மற்றும் டாப் 10 பணக்கார நடிகைகள் யார் யார் என்பதை இந்த பட்டியலில் பார்ப்போம்.
தெலுங்கு சினிமாவின் பணக்கார நடிகைகளின் பட்டியலில் 10ம் இடத்தில் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா உள்ளார். தெலுங்கில் தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள இவர், Krishna Gadi Veera Prema Gaadha மற்றும் Mahanubhavudu ஆகிய ஹிட் படங்கள் மூலம் மிகவும் பிரபலமானார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 38 கோடி ரூபாய் ஆகும். படம் ஒன்றில் கமிட்டாக 60 லட்சம் முதல் 90 லட்சம் வரை சம்பளம் பெற்று வருகிறார்.
இந்த டாப் 10 பட்டியலில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் 9ம் இடத்தை பிடித்துள்ளார். தெலுங்கில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள இவர், தற்போது பாலிவுட் சினிமாவிலும் கலக்கி வருகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய் ஆகும்.
தமிழ் நடிகையான ஸ்ருதி ஹாசன் தற்போது முழுக்க முழுக்க தெலுங்கு நடிகையாக ஜொலித்து வருகிறார். தெலுங்கில் ஏராளமான ஹிட் படங்கள் கொடுத்து மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 45 கோடி ரூபாய் ஆகும்.
மலையாள நடிகையான சாய் பல்லவி, முழுக்க முழுக்க தெலுங்கு நடிகையாக தன்னை உருமாற்றிக்கொண்டார். தெலுங்கில் தனக்கென மிக பெரிய இடத்தையும் உருவாக்கிக்கொண்டார். சாய் பல்லவியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 47 கோடி ரூபாய் ஆகும்.
தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வரும் காஜல் அகர்வால், தெலுங்கு சினிமாவிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள காஜலின் சொத்து மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் ஆகும்.
தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, படம் ஒன்றில் நடிக்க சுமார் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் நிர்ணயித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் பூஜாவின் சொத்து மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய் ஆகும்.
தெலுங்கு சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ராஷ்மிகா, தற்போது பாலிவுட் சினிமாவிலும் ஜொலித்து வருகிறார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் நான்கிற்கும் அதிகமான படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 66 கோடி ரூபாய் ஆகும்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடித்து தெலுங்குகில் மிகவும் பிரபலமானவர் நடிகை சமந்தா. பின்னர் பல ஹிட் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் மிக பெரிய இடத்தை உருவாக்கிக்கொண்டார். தற்போது தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் சமந்தாவின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் ஆகும்.
மில்க் பியூட்டி தமன்னா, தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். படத்திற்கு 5 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 110 கோடி ரூபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications