2025ல் வெளியான தரமான டாப் 10 தமிழ் வெப் சீரிஸ்.. என்னென்ன? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
2025ம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் வெப் தொடர்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்த டாப் 10 வெப் சீரிஸ் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2022ல் வெளிவந்த திரில்லர் வெப் தொடர் 'சூழல்'. முதல் சீசன் அமோக வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அத்தொடரின் இரண்டாவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் பிரைம் ரிலீசாகி ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்தது.
விமல், புகழ், கஞ்சா கருப்பு நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் வெப் தொடர் 'ஓம் காளி ஜெய் காளி'. இத்தொடரின் முதல் சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகி சினிமா ரசிகர்களை அதிகம் ஈர்த்து வந்தது.
குரு லக்ஷ்மன், கவிதா பாரதி, ஷிவா அரவிந்த் உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த காமெடி வெப் தொடர் 'ஆபிஸ்'. இத்தொடரின் முதல் சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகி அமோக வரவேற்பு பெற்றது.
ஏஞ்சலின், ரேணுகா, கண்ணா ரவி, குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'மதுரை பையனும் சென்னை பொண்ணும்'. இத்தொடரின் முதல் சீசன் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றது.
தீபா, அனுமோல், சாருகேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த ரொமான்டிக் டிராமா வெப் தொடர் 'ஹார்ட் பீட். இந்த ரொமான்டிக் தொடரின் இரண்டாம் சீசன் கடந்த மே மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி சினிமா ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
கடந்த மாதம் வெளிவந்த ஸ்போர்ட்ஸ் டிராமா வெப் தொடர் 'நடு சென்டர்'. டீன் ஏஜ் பள்ளி மாணவர்களுக்கிடையே நடக்கும் கதைக்களம். ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி சினிமா ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.
கண்ணா ரவி, ஜீவா ரவி, ரேகா நாயர் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் வெப் தொடர் 'வேடுவன்'. ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிடி பிரியர்களால் அதிகம் பார்க்கப்பட்டது.
பசுபதி நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த கிரைம், திரில்லர் வெப் தொடர் 'குற்றம் புரிந்தவன்'. சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸான இத்தொடர் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
பிரியாமணி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த வெப் தொடர் 'குட் வைஃப்'. திரில்லான கோர்ட் டிராமா கதைக்களத்தில் வெளிவந்த இந்த வெப் தொடரின் முதல் சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகி வேற லெவல் வரவேற்பு பெற்றது.


Click it and Unblock the Notifications