இந்தியா எந்தெந்த நாடுகளிடம் இருந்து அதிக தங்கம் இறக்குமதி செய்கிறது தெரியுமா? டாப் 5 பட்டியல்!
இந்தியா எந்தெந்த நாடுகளிடம் இருந்து அதிகமான தங்கத்தை இறக்குமதி செய்கிறது என்பதை இந்த பட்டியலில் பார்ப்போம்.
இந்தியாவுக்கு அதிகமான தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. உலகின் முன்னணி தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக ஆஸ்திரேலியா இருக்கும் நிலையில், சுமார் 27,118.55 கோடி ரூபாய் அளவிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவுக்கு அதிகமான தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் பெரு நாடு உள்ளது. சுமார் 38,183.65 கோடி ரூபாய் அளவிலான தங்கத்தை பெரு நாட்டிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவுக்கு அதிகமான தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் தென்னாப்பிரிக்கா நாடு உள்ளது. தங்க சுரங்கங்கள் நிறைந்த தென்னாப்பிரிக்கா, சுமார் 57,592.91 கோடி ரூபாய் அளவிலான தங்கத்தை இந்தியாவுக்கு இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவுக்கு அதிகமான தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் உள்ளன. உலகளவில் தங்க வர்த்தகத்தின் மையமாக திகழும் ஐக்கிய அரபு நாடுகள் சுமார் 1,46,022.98 கோடி ரூபாய் அளவிலான தங்கத்தை இந்தியாவுக்கு இறக்குமதி செய்துள்ளது.
இறுதியாக, இந்தியாவுக்கு அதிகமான தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது. அதிநவீன தங்கம் சுத்திகரிப்பு மையங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து 2024-2026 வரை சுமார் 1,77,767.10 கோடி ரூபாய் அளவிலான தங்கத்தை இந்தியாவுக்கு இறக்குமதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications