தென்னிந்தியாவின் காஸ்ட்லியான நடிகைகள் யார்? வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? டாப் 5 லிஸ்ட்!
ஸ்டார் நடிகைகளுக்கு இணையாக பல கோடிகளில் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் யார்? யாருக்கு மவுசு அதிகம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தென்னிந்தியாவின் காஸ்ட்லியான நடிகைகளின் பட்டியலில் 5ம் இடத்தில் சமந்தா உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெவ்வேறு மொழிகளில் கலக்கிகொண்டிக்ரும் சமந்தாவின் மார்க்கெட் சிகிச்சைக்கு முன் பின் என்று பிரிக்கலாம். அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்து நடிக தொடங்கினார். ஆனால் அவரின் மார்க்கெட் முன்பை போல் இல்லை என்றே சொல்லலாம். இருந்தும் படம் ஒன்றில் கமிட்டாகி நடிக்க சுமார் 3-8 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார். மேலும் இவரின் சொத்து மதிப்பு சுமார் 100-110 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் இவர், இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்பொண்ணு ராஷ்மிகா இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் ஸ்டார் நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா, பாலிவுட் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து ஜொலித்து வருகிறார். அனிமல் மற்றும் புஷ்பா ஆகிய படங்களை இவரை பான் இந்தியா அளவில் பிரபலமாகியது. படம் ஒன்றில் கமிட்டாகி நடிக்க சுமார் 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார். அதேபோல் ஓடிடி தொடரிலும் நடிக்க கோடிகளில் சம்பளம் பெற்று வருகிறார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 100-110 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் ஒருவராக திரிஷா உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர், படம் ஒன்றில் கமிட்டாகி நடிக்க சுமார் 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார். சிரஞ்சீவியின் 'விஸ்வம்பரா' படத்தில் நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இவரின் சொத்து மதிப்பு சுமார் 85 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 2ம் இடத்தில் சாய் பல்லவி உள்ளார். சைலெண்டாக சம்பவம் செய்து வரும் சாய் பல்லவி, படம் ஒன்றில் கமிட்டாகி நடிக்க சுமார் 6 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார். மேலும் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' படத்தில் நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவரின் சொத்து மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இறுதியாக, தென்னிந்தியாவின் நம்பர் ஒன் காஸ்ட்லியான நடிகையாக நயன்தாரா உள்ளார். தென்னிந்தியாவை கலக்கிக்கொண்டிருந்த நயன்தாரா, ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற இவர், தனது சம்பளத்தை 12 கோடியாக உயர்த்தியுள்ளார். இதன் மூலம் தற்போது தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் காஸ்ட்லி நடிகையாக உள்ளார்.


Click it and Unblock the Notifications