சீரியல் பிரியர்களே! டிவியில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் சீரியல்கள் என்னென்ன தெரியுமா? சுவாரசியமான டாப் 5 லிஸ்ட்!
சின்னத்திரையில் அதிக நாட்கள் ஓடிய சீரியல்கள் என்னன்ன? எந்தெந்த சீரியல்கள் அதிக எபிசோடுகள் ஓடி இல்லத்தரசிகளை ஈர்த்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
டிவியில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் சீரியல்களின் பட்டியலில் 5ம் இடத்தில் ராதிகாவின் 'வாணி ராணி' சீரியல் உள்ளது. 2013ல் தொடங்கிய இத்தொடர் 2018ல் முடிவுக்கு வந்தது. அதன்படி இத்தொடர் 1743 எபிசோடுகள் என மொத்தம் 4 ஆண்டுகள் 9 மாதம் சன் டிவியில் ஒளிபரப்பானது.
டிவியில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் சீரியல்களின் பட்டியலில் 4ம் இடத்தில் 'கல்யாண பரிசு' சீரியல் உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான இத்தொடர் 2014இல் தொடங்கி 2020இல் முடிவுக்கு வந்தது. ஏறக்குறைய இத்தொடர் 1840 எபிசோடுகள் என மொத்தம் 5 ஆண்டுகள் 3 மாதம் சன் டிவியில் ஒளிபரப்பானது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பாப்புலரான காதல் ட்ராமா சீரியல் 'சரவணன் மீனாட்சி'. இத்தொடர் 2011இல் தொடங்கி 2018இல் நிறைவடைந்தது. இன்றும் பலரின் விருப்பமான சீரியலாக இருக்கும் இத்தொடர் 1901 எபிசோடுகள் ஓடின. அதாவது சுமார் 5 ஆண்டுகள் 10 மாதம் ஓடியதாக கூறப்படுகிறது.
டிவியில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் சீரியல்களின் பட்டியலில் 2ம் இடத்தில் 'வள்ளி சீரியல்' உள்ளது. இந்த சன் டிவி தொடர் 2012இல் தொடங்கி 2019இல் நிறைவடைந்தது. 1961 எபிசோடுகள் கொண்ட இத்தொடர் மொத்தம் 6 ஆண்டுகளுக்கும் மேல் ஓடியதாக கூறப்படுகிறது.
இறுதியாக, டிவியில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் சீரியல்களின் பட்டியலில் முதல் இடத்தில் 'சந்திரலேகா சீரியல்' உள்ளது. இந்த சன் டிவி தொடர் 2014இல் தொடங்கி 2022இல் நிறைவடைந்தது. 2315 எபிசோடுகள் கொண்ட இத்தொடர் 7 ஆண்டுகளுக்கும் மேல் ஓடியதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவிலேயே அதிக நாட்கள் ஓடிய தொடராக முதல் இடத்தில் உள்ளது.



Click it and Unblock the Notifications