பெங்களூருவில் உள்ள டாப் 6 கோடீஸ்வரர்கள்.. நம்பர் ஒன் யாரு? பிரமிக்கவைக்கும் சொத்து மதிப்பு!
இந்தியாவின் ஐடி ஹப் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் உள்ள டாப் கோடீஸ்வரர்கள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பெங்களூருவில் உள்ள டாப் 6 கோடீஸ்வரர்கள் பட்டியலில் 6ம் இடத்தில் இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனத்தின் இணை நிறுவனர் எஸ். கோபாலகிருஷ்ணன் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 30,740 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
டாப் 6 கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் GMR Group கட்டுமான நிறுவனத்தின் நிறுவனர் ஜி.எம். ராவ் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 31,340 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
டாப் 6 கோடீஸ்வரர்கள் பட்டியலில் 4ம் இடத்தில் Bagmane Developers ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனர் ராஜா பாக்மனே உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 31,510 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
பெங்களூருவின் டாப் 6 கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் Manipal நிறுவனத்தின் தலைவர் ரஞ்சன் பாய் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 34,700 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
பெங்களூருவின் டாப் 6 கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் Zerodha நிறுவனத்தின் நிறுவனர் நிதின் காமத் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 40,020 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இறுதியாக, பெங்களூருவின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக விப்ரோ ஐடி நிறுவனத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2,21,250 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications