விவாகரத்திற்கு பின் ரூ.300 கோடி ஜீவனாம்சம் கொடுத்த பாலிவுட் நடிகர்.. யார்? இந்தியாவின் விலையுயர்ந்த டாப் 7 விவாகரத்து.. லிஸ்ட்!
விவாகரத்து.. திரையுலகளில் நாம் அடிக்கடி கேட்கும் சொல். டேட்டிங்-காதல்-திருமணம்-விவாகரத்து இந்த சங்கிலி தொடர் தற்போது திரையுலகில் சகஜமாகிவிட்டது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டால் உடனே விவாகரத்து செய்துகொள்கின்றனர். விவாகரத்தின்போது மனைவிக்கு கணவர் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும் என்ற சட்டம் உண்டு. அதன்படி விவாகரத்துக்கு பின், பெரும் தொகையை ஜீவனாம்சமாக கொடுத்த நடிகர் யார்? இந்தியாவில் நிகழ்ந்த விலையுயர்ந்த விவாகரத்து எது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான விவாகரத்தாக ஹிருத்திக் ரோஷன்-சுசானே கான் விவாகரத்து உள்ளது. 2000ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி 14 வருட திருமண உறவுக்கு பின் 2014ல் விவாகரத்து செய்துகொண்டனர். இதில், ஹிருத்திக் ரோஷன் சும்மர் 350 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக சுசானே கானுக்கு கொடுத்துள்ளார். இந்தியாவில் காஸ்ட்லியான விவாகரத்தாக பார்க்கப்படுகிறது.
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் பாலிவுட் பிரபலங்களான கரிஷ்மா கபூர்-சுஞ்சய் கபூர் உள்ளனர். 2014ல் திருமணம் செய்துகொண்டதை தொடர்ந்து 2016ல் விவாகரத்து செய்துகொண்டனர். 70 கோடி ரூபாய் மற்றும் சொகுசு வீட்டை கரிஷ்மா கபூருக்கு ஜீவனாம்சமாக கொடுக்கப்பட்டது.
மூன்றாம் இடத்தில் பாலிவுட் பிரபலங்கள் அமீர்கான்-ரீனா தத்தா உள்ளனர். 16 வருட திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் விவாகரத்து செய்துகொண்டு பிரிந்துவிட்டனர். இதில், சும்மர் 50 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக ரீனா தத்தாவுக்கு கொடுக்கப்பட்டது.
நான்காம் இடத்தில் மலைக்கா அரோரா-அர்பாஸ் கான் உள்ளனர். 16 வருட திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் விவாகரத்து பெற்றனர். அர்பாஸ் கான் சுமார் 15 கோடி ரூபாயை ஜீவனாம்சமாக மலைக்கா அரோராவுக்கு கொடுத்துள்ளார்.
ஐந்தாம் இடத்தில் சைஃப் அலி கான்-அம்ரிதா சிங் உள்ளனர். 13 வருட திருமணம உறவுக்கு பின் இருவரும் விவாகரத்து பெற்றனர். சைஃப் அலி கான், சுமார் 5 கோடி ரூபாய் மற்றும் மகனுக்கு 18 வயது நிரம்பும் வரை மாதம் குறிப்பிட்ட தொகை செலவுக்கு கொடுக்கவேண்டும் ஆகிய நிபர்த்தனைவுடன் ஜீவனாம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை கடந்த மார்ச் மாதம் விவாகரத்து செய்தார். தனஸ்ரீ வர்மாவுக்கு சாஹல் சும்மர் 4.75 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கொடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
பெங்களூருவை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் அதில் சுபாஷ், மனைவி கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. அதிகப்படியான ஜீவனாம்சம் கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலை செய்ய துண்டியுள்ளார் முன்னாள் மனைவி. ஏற்கனவே 4 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை ஜீவனாம்சமாக கொடுத்த நிலையில் மேலும் அதிகப்படியான பணம் வேண்டும் என மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications