ரிலீஸாகும் முன்பே பல கோடி ரூபாய் பிசினஸ்.. அதிக விலைக்கு விற்கப்பட்ட டாப் 7 இந்திய படங்கள்.. தமிழ் படம் இருக்கா? லிஸ்ட்!
தியேட்டரில் ரிலீஸாகும் சின்ன படமோ பெரிய படமோ ஒரு மாதத்திற்கு பின் ஓடிடி தளத்தில் ரிலீஸாவது வழக்கம். அப்படியாக தியேட்டரில் ஹிட்டாகும் படங்களுக்கு ஓடிடி உரிமம் எடுப்பதில் போட்டி நிலவும், அதுவும் ஸ்டார் நடிகர்களின் படங்கள் தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே ஓடிடி தளங்கள் போட்டிபோட்டுக்கொண்டு உரிமத்தை கைப்பற்றும். அப்படியாக ஓடிடியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட டாப் 7 இந்திய படங்கள் என்னென்ன? எந்த விலைக்கு விற்கப்பட்டது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஓடிடியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட டாப் 7 இந்திய படங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் 'சலார் பார்ட் 1' திரைப்படம் உள்ளது. பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 160 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது.
இந்த பட்டியலில் 6ம் இடத்தில் 'ஆதிபுருஷ்' திரைப்படம் உள்ளது. பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை 200 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியது.
இந்த பட்டியலில் 5ம் இடத்தில் 'புஷ்பா 2' திரைப்படம் உள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்த இப்படத்தை 275 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது.
இந்த பட்டியலில் 4ம் இடத்தில் 'கேஜிஎஃப் 2' திரைப்படம் உள்ளது. யாஷ் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை 320 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியது.
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உள்ளது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை 325 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது.
இந்த பட்டியலில் 2ம் இடத்தில் 'கல்கி 2898 AD' திரைப்படம் உள்ளது. பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை 375 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியது.
இறுதியாக, இந்தியாவிலேயே ஓடிடியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட டாப் 7 இந்திய படங்களின் பட்டியலில் முதல் இடத்தில் 'ராமாயணா' திரைப்படம் உள்ளது. படம் ரிலீஸாகும் முன்பே இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் 450 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications