காதலை வேறு கோணத்தில் காட்டிய மலையாள திரைப்படங்கள்.. இந்த டாப் 8 லிஸ்டை மிஸ் பண்ணிடாதீங்க!
மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2022ம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் ஹ்ருதயம். பிரணவ் மோகன்லால், கல்யாணி ப்ரியதர்ஷன், தர்ஷனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் மெகா ஹிட்டானது. சினிமா ரசிகர்களை அதிகம் ஈர்த்த இப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
2017ல் வெளியான லவ் திரைப்படம் மாயாநதி. குற்ற செயல்களில் ஈடுபடும் ஹீரோவுக்கும் கல்லூரி மாணவிக்கும் இடையே ஏற்படும் காதல் கதையே மாயாநதி திரைப்படமாகும். இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் காதல் திரைப்படம் ப்ரேமம். மலையாளத்தில் வெளியான இப்படம் தமிழில் அமோக வெற்றியை பெற்றது. தமிழ் இளைஞர்களால் ஆஹா ஓஹோவென கொண்டாடப்பட்டது. இன்றளவும் இப்படத்திற்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
பகத் பாசில், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னாயும் ரசூலும். 2013ம் ஆண்டு வெளியான இப்படம் இரு வேறு மதத்தை சேர்ந்தவர்களின் காதல் கதையே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
நிவின் பாலி, ஈஷா தல்வார் நடிப்பில் வெளியான திரைப்படம் தட்டதின் மரயது. இரு வேறு மதத்தை சேர்த்தவர்கள் காதல் செய்யும்போது ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதே இப்படத்தின் கதைக்களம் ஆகும். இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications