Home / Photos
ரசிகர்கள் கொண்டாடிய தமிழ் 'திரில்லர் வெப் சீரிஸ்'.. எந்த ஓடிடி-யில் பார்க்கலாம்? டாப் 8 லிஸ்ட் இதோ!
By Chandru
திரைப்படங்களுக்கு இணையாக ஓடிடி வெப் தொடர்களும் சினிமா ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. அந்தவகையில் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரில்லர் வெப் சீரிஸ் எது எது என்பதையும், எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பதயும் இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Share
2020ம் ஆண்டு ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான தொடர் கண்ணாம்மூச்சி. திரில்லர், ஹாரர் தொடராக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. இத்தொடரில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். 5 எபிசோடுகள் வெளியான இந்த திரில்லர் தொடர் இன்றும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.
2/7
Share
2021ம் ஆண்டு எம்எக்ஸ் பிளேயர் ஓடிடி தளத்தில் வெளியான தொடர் குருதிக்களம். பிக் பாஸ் சனம் ஷெட்டி, அசோக் குமார் உள்ளிட்ட பல திரை பட்டாளங்கள் நடிப்பில் வெளியான இத்தொடர், குட சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இத்தொடர் ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.
3/7
Share
கடந்த 2019ம் ஆண்டு சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான தொடர் இரு துருவம். முக்கிய பிரபலங்கள் நடிப்பில் வெளியான இத்தொடரில் ஒவ்வொரு காட்சிகளும் செம த்ரில்லிங்காக இருக்கும். த்ரில்லிங்கான படங்களை பார்க்க விரும்புவர்களுக்கு ஏற்ற தொடர்மகவும். மேலும் இத்தொடர் மொத்தம் 9 எபிசோடுகளுடன் வெளியானது.
4/7
Share
கடந்தாண்டு ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான தொடர் செங்களம். அரசியலை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரில்லர் தொடராக ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.
5/7
Share
போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த விமலுக்கு செம கம்பேக் கொடுத்தது இந்த விலங்கு வெப் தொடர். ஜீ 5 ஓடிடி தளத்தில் இத்தொடரை பார்க்கலாம்.
6/7
Share
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான வெப் தொடர் சூழல். க்ரைம் மர்மங்கள் நிறைந்த தொடராக வெளியாகி திரில்லர் விரும்பிகளை அதிகம் ஈர்த்தது.
7/7
Share
நடிகை தமன்னா நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரில்லர் தொடர் நவம்பர் ஸ்டோரி. ஒரு மர்மமான கொலையை சுற்றி நடக்கும் நிகழ்வை இத்தொடர் வெளிக்காட்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications