மதுபான விற்பனையில் அதிக வருமானம் ஈட்டும் தென் மாநிலங்கள்.. தமிழ்நாடு எத்தனையாவது இடம்? பட்டியல்!
தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் மதுபான விற்பனை மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டி வருகிறது. அதன்படி தென் மாநிலங்களில் மதுபான விற்பனையில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலங்கள் என்னென்ன? எவ்வளவு? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மதுபான விற்பனை மூலம் அதிக வருமானம் ஈட்டும் தென் மாநிலங்களில் 5ம் இடத்தில் கேரளா உள்ளது. வருடத்திற்கு சுமார் 10,000-15,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. கேரள அரசின் ஆண்டு வருமானத்தில் 6 சதவீதம் மதுபான கடைகளில் இருந்து கிடைக்கிறது.
மதுபான விற்பனை மூலம் அதிக வருமானம் ஈட்டும் தென் மாநிலங்களில் 4ம் இடத்தில் தெலுங்கானா மாநிலம் உள்ளது. வருடத்திற்கு சுமார் 20,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கானா அரசின் ஆண்டு வருமானத்தில் 9 சதவீதம் மதுபான கடைகளில் இருந்து கிடைக்கிறது.
மதுபான விற்பனை மூலம் அதிக வருமானம் ஈட்டும் தென் மாநிலங்களில் 3ம் இடத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலம் உள்ளது. வருடத்திற்கு சுமார் 25,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆந்திர அரசின் ஆண்டு வருமானத்தில் 9 சதவீதம் மதுபான கடைகளில் இருந்து கிடைக்கிறது.
மதுபான விற்பனை மூலம் அதிக வருமானம் ஈட்டும் தென் மாநிலங்களில் 2ம் இடத்தில் கர்நாடகா மாநிலம் உள்ளது. வருடத்திற்கு சுமார் 30,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. கர்நாடக அரசின் ஆண்டு வருமானத்தில் 17 சதவீதம் மதுபான கடைகளில் இருந்து கிடைக்கிறது.
இறுதியாக, மதுபான விற்பனை மூலம் அதிக வருமானம் ஈட்டும் தென் மாநிலங்களில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. வருடத்திற்கு சுமார் 44,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. TASMAC மூலம் நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் வருமானமும், வார இறுதி நாட்களில் நாள் ஒன்றுக்கு 120 கோடி ரூபாய்க்கும் மதுபான விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் விஜய், பள்ளி, கல்லூரி, கோவில், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களுக்கு அருகில் இருக்கும் 717 TASMAC கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications