மூணார், வயநாடுக்கு குட்பாய் சொல்லிட்டு.. பலரும் அறியாத கேரளாவின் இந்த சூப்பர் ஸ்பாட்டுக்கு ட்ரிப் பிளான் பண்ணுங்க!
இந்த சம்மருக்கு இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவுக்கு ட்ரிப் பிளான் பண்றீங்களா? அனைவரும் செல்ல விரும்பும் மூணார், வயநாடு ஆகிய சுற்றுலாத்தலங்களை தவிர்த்து பலருக்கும் பரிச்சயம் இல்லாத சூப்பரான ஹிட்டன் ஸ்பாட்கள் என்னன்ன? இந்த சம்மருக்கு எங்க போகலாம் என்பதை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
கண்ணூர் மாவட்டத்தில் அமைத்துள்ள ஹிட்டன் ஸ்பாட் 'வலியபரம்ப' (valiyaparamba). பையனூர் என்ற இடத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ளது. குடும்பத்துடன் ஒரு அமைதியான ட்ரிப் செல்ல ஏற்ற இடமாகும். படகுசவாரி, சிறப்புமிக்க கோவில்கள், வரலாறு சிறப்புமிக்க கோட்டைகள், கடற்கரைகள் என இந்த சம்மருக்கு சூப்பரான ஹிட்டன் ஸ்பாட்டாக உள்ளது.
கண்ணூர் ரயில்நிலையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள சூப்பரான அமைதியான சுற்றுலாத்தலம் 'மீன்குன்னு கடற்கரை' (meenkunnu beach). கூட்டமே இல்லாத அமைதியான இந்த கடற்கரையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவழிக்க சூப்பரான இடமாகும். விதவிதமான கடல் உணவுகளை ருசித்தபடி இந்த சம்மரை என்ஜாய் பண்ணலாம்.
கண்ணூர் ரயில்நிலையத்தில் இருந்து 61 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள அமைதியான சுற்றுலாத்தலம் 'பைதல்மல' (Paithalmala). மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைத்துள்ள இந்த இடத்தில் நண்பர்களுடன் ட்ரெக்கிங் செய்யலாம், நீர்வீழ்ச்சியில் ஜாலி பண்ணலாம். பலருக்கும் தெரியாத இந்த இடத்தில் இயற்கையின் அழகை ரசித்தபடியே இந்த சம்மரை என்ஜாய் பண்ணலாம்.
காசர்கோடு மாவட்டத்தில் அமைத்துள்ள அழகான அமைதியான சுற்றுலாத்தலம் 'ராணிபுரம்'. கண்ணங்காடு ரயில்நிலையத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ளது. மலைகளில் ட்ரெக்கிங் செய்ய சூப்பரான இடமாகும். மேலும் இந்த ஸ்பாட்டுக்கு அருகில் பேக்கல் கோட்டை, கப்பில் கடற்கரை ஆகிய இடங்களையும் சுற்றிப்பார்க்கலாம். இந்த சம்மருக்கு இந்த ஸ்பாட்டை எக்ஸ்ப்ளோர் செய்ய மிஸ் பண்ணிடாதீங்க.
தேனி மாவட்டத்தில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள சுற்றுலாத்தலம் 'மீசபுளிமலை' (Meesapulimala). தேயிலை தோட்டங்களால் நிறைந்த ரம்மியமான இயற்கை அழகு கொண்ட மலைவாசஸ்தலம். இந்த சம்மருக்கு ட்ரிப் செல்ல மிஸ் பண்ணிடாதீங்க.
பாலக்காடு ரயில்நிலையத்தில் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள சுற்றுலாத்தலம் 'நெல்லியம்பதி' (Nelliyampathy). தேயிலை தோட்டங்கள், ஆரஞ்சு தோட்டங்கள், நீர்வீழ்ச்சி என சூப்பரான இடங்கள் நிறைந்த மலைவாசஸ்தலம். குளு குளு கிளைமேட்டை என்ஜாய் செய்ய இந்த சம்மருக்கு சூப்பர் ஸ்பாட்டாக உள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் அமைத்துள்ள சுற்றுலாத்தலம் 'தென்மலை' (Thenmala). தென்மலை ரயில்நிலையத்தில் இருந்து 2.4 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ளது. செந்தூர்னி வனவிலங்கு சரணாலயத்தில் பலவிதமான விலங்குகளை நாம் காணலாம். குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவழிக்க சூப்பரான சம்மர் ஸ்பாட்டாகும்.


Click it and Unblock the Notifications