25 டிகிருக்கும் குறைவான வெப்பநிலை.. குளுகுளு கிளைமேட்டை என்ஜாய் பண்ண டாப் 5 சுற்றுலாத்தலங்கள்!
இந்த கோடையில் வெப்பநிலை குறைவாக குளுகுளு கிளைமேட் நிறைந்திருக்கும் மலைவாசஸ்தலங்கள் என்னென்ன? குடும்பத்துடன் எங்கு பயணிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள 'தீர்த்தன்' மலைவாசஸ்தலம் இந்த சம்மருக்கு ஏற்ற சூப்பரான சுற்றுலாத்தலமாகும். நண்பர்களுடன் ட்ரெக்கிங் செய்யலாம், விதவிதமான பறவைகளை காணலாம், ஆற்றில் மீன்பிடித்து மகிழம். கூட்டம் குறைவாகவும் குளுமை நிறைந்த இந்த தீர்த்தன் சுற்றுலாத்தலத்திற்கு இந்த சம்மர் ஒரு ட்ரிப் செல்ல பிளான் செய்ய மறந்துடாதீங்க.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சூப்பரான சுற்றுலா ஸ்பாட் 'பின்சார்' (Binsar). இமயமலையின் அழகை கண்டு ரசிக்க சூப்பரான ரம்மியமான இடமாகும். 25 டிகிருக்கும் குறைவான குளுகுளு வெப்பநிலை நிறைந்த இந்த சுற்றுலாத்தலத்தை இந்த சம்மருக்கு ட்ரிப் பிளான் பண்ண மிஸ் பண்ணிடாதீங்க.
மேற்குவங்கத்தில் அமைந்துள்ள சூப்பரான சுற்றுலா ஸ்பாட் 'கலிம்போங்'. டார்ஜிலிங் சுற்றுலாத்தலத்தில் இருந்து இரண்டு மணிநேரம் தொலைவில் அமைத்துள்ள குளு குளு ஸ்பாட். விதவிதமான உணவுகள், புத்தமத கலாச்சாரங்களை கண்டு ரசிக்கலாம். 110 வருட பழமையான தேவாலயத்தை காணலாம். குடும்பத்துடன் அமைதியாக குளுமையாக நேரத்தை செலவழிக்க சூப்பரான சுற்றுலாத்தலமாகும்.
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள அழகான சுற்றுலா ஸ்பாட் 'நக்கர்' (Naggar). கூட்டம் குறைவாகவும், மன நிம்மதியும் தரும் இந்த சுற்றுலாத்தலம் இந்த சம்மருக்கு ஏற்ற சூப்பர் ஸ்பாட்டாகும்.
உத்தராகண்டில் உள்ள மற்றொரு கலக்கலான குளுமையான சுற்றுலாத்தலம் 'லேண்டூர்'. நண்பர்களுடன் ட்ரெக்கிங், வியூ பாயிண்ட், விதவிதமான உணவுகள் என குடும்பத்துடன் இந்த சம்மரை கொண்ட சூப்பர் சுற்றுலாத்தலமாகும்.


Click it and Unblock the Notifications