மேகங்களை தொடும் உயரம்.. இந்த சம்மருக்கு ட்ரிப் செல்லவேண்டிய.. உயரமான டாப் 8 மலைவாசஸ்தலங்கள்!
மேகங்களை தொடும் தொலைவில் அமைத்துள்ள இந்தியாவின் உயரமான குளுமையான மலைவாசஸ்தலங்கள் என்னென்ன? இந்த சம்மருக்கு எங்க போகலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடல் மட்டத்தில் இருந்து 2,050 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைவாசஸ்தலம் 'டார்ஜிலிங்'.மேற்குவங்கத்தில் அமைத்துள்ள இந்த சுற்றுலாத்தலம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை அதிகம் ஈர்த்து வருகிறது. உரசி செல்லும் மேகங்களுடன் குளு குளு கிளைமேட்டை என்ஜாய் பண்ண இந்த சம்மருக்கு டார்ஜிலிங் ட்ரிப் செல்ல பிளான் பண்ணுங்க.
கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைவாசஸ்தலம் 'ஷிம்லா'. ஹிமாச்சலப்பிரதேசத்தில் அமைத்துள்ள சூப்பரான சுற்றுலாத்தலமாக உள்ளது. ஷிம்லா டாய் ரயில் பயணம் செய்ய பலரும் ஆர்வம் காட்டுவது வழக்கம். குளு குளு கிளைமேட்டுடன் மேகங்களை தொட்டு மகிழனுமா? இந்த சம்மர் ஷிம்லா ட்ரிப் செல்ல மிஸ் பண்ணிடாதீங்க.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சூப்பரான சுற்றுலாத்தலம் 'முசோரி'. கடல் மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது. நீர்வீழ்ச்சி, வியூ பாயிண்ட் என குடும்பத்துடன் நிம்மதியாக சம்மரை என்ஜாய் பண்ண சூப்பரான சுற்றுலாத்தலமாகும். டெல்லியில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவும், டேராடூனில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் முசோரி அமைத்துள்ளது.
கர்நாடகாவில் அமைந்துள்ள கலக்கலான சுற்றுலாத்தலம் 'கூர்க்'. கடல் மட்டத்தில் இருந்து 1525 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது. காஃபி தோட்டங்கள், நீர்வீழ்ச்சி என குடும்பத்துடன் குளுமையான கிளைமேட்டை என்ஜாய் பண்ணலாம். மேகங்கள் நம்மை உரசி செல்லும் கூர்க், மங்களூருவில் இருந்து 136 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், கடல் மட்டத்தில் இருந்து 2,133 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது. அதிகப்படியான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல் இந்த கொடைக்கு ஏற்ற குளுமையான மலைவாசஸ்தலமாகும். இந்த சம்மர் ட்ரிப் செல்ல மிஸ் பண்ணிடாதீங்க.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள மற்றொரு சூப்பரான சுற்றுலாத்தலம் 'நைனிடால்'. கடல் மட்டத்தில் இருந்து 2,084 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இந்த சம்மர் கொடைக்கானலுக்கு ட்ரிப் பிளான் பண்ண மிஸ் பண்ணிடாதீங்க.
கர்நாடகாவில் அமைத்துள்ள மற்றொரு சூப்பரான சுற்றுலாத்தலம் 'நந்தி மலை'. கடல் மட்டத்தில் இருந்து 1,478 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது. பெங்களூருவில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள சூப்பரான சம்மர் ஸ்பாட்.
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மலைவாசஸ்தலம் 'மாதேரன்'. மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைத்துள்ள சூப்பரான சம்மர் ஸ்பாட். கடல் மட்டத்தில் இருந்து 800 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது. மனதை மயக்கும் வியூ பாயிண்டுகள் நிறைந்த சுற்றுலாத்தலமாகும். இந்த சம்மர் மாதேரன் சுற்றுலாத்தலத்திற்கு ஒரு ட்ரிப் பிளான் பண்ண மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications