Home / Photos
பெண் குழந்தைக்கு அப்பாவான டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன்.. அவரின் மனைவியை பாத்துருக்கீங்களா?
By Chandru
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார். குழந்தையுடன் அபிஷன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்த்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@Abishan Jeevinth
Share
2025ல் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு ஆக்கியோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளிவந்த ஃபீல் குட் திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல்வழியாக அகதிகளாக வரும் ஒரு குடும்பத்தின் கதை.
2/7
Photo Credit: instagram@Abishan Jeevinth
Share
அப்படம் தியேட்டரில் ஆஹா ஓஹோவென கொண்டாடப்பட்டது. வெறும் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உலகளவில் 90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அறிமுக இயக்குநராக வெற்றி கண்டுள்ளார்.
3/7
Photo Credit: instagram@Abishan Jeevinth
Share
முதல் படம் இயக்குநராக வெற்றி கண்ட அபிஷன், ஹீரோவாக 'வித் லவ்' படத்தில் நடித்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான அப்படம் விமர்சனத்திலும், வசூலிலும் செம ஹிட்டானது. ஹீரோவாகவும் வெற்றிவாகை சூட்டியுள்ளார்.
4/7
Photo Credit: instagram@Abishan Jeevinth
Share
தற்போது இவர், 'பிக்காசோ' என்ற படத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். திரையில் ஸ்டாராக வலம் வரும் இவர், தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
5/7
Photo Credit: instagram@Abishan Jeevinth
Share
பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த அகிலாவை இருவீட்டாரின் சம்மதத்துடன் ஜாம் ஜாம் என திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் முதலாம் ஆண்டு திருமணம் நாளை கொண்டாடியுள்ளார்.
6/7
Photo Credit: instagram@Abishan Jeevinth
Share
முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடியதை தொடர்ந்து தற்போது குட் நியூஸ் ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ஆமாங்க அபிஷன் அப்பாவாகியுள்ளார்.
7/7
Photo Credit: instagram@Abishan Jeevinth
Share
அபிஷன் ஜீவிந்த் பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். கையில் பெண் குழந்தையுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தற்போது அபிஷனுக்கு ஃபேன்ஸ் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications