ஊட்டி, கொடைக்கானலுக்கு பாய் சொல்லிட்டு.. இந்த சம்மருக்கு பிளான் பண்ணவேண்டிய சூப்பரான மலைவாசஸ்தலங்கள்!
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து மக்கள் குடும்பத்துடன் சுற்றுப்பயணத்திற்கு தயாராகிவிட்டனர். கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க மலைவாசஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் படையெடுத்து வருகின்றனர். அதன் எதிரொலியாக ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைவாசஸ்தலங்களில் கடும் கூட்ட நெரிசல். இப்படியான சூழ்நிலையில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத அமைதியான தென்னிந்திய மலைவாசஸ்தலங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கர்நாடகாவில் உள்ள கூர்க் சுற்றுலா தலம் இந்த சம்மருக்கு ஏற்ற சூப்பரான இடமாகும். நீர்வீழ்ச்சி, ட்ரெக்கிங், வனவிலங்கு ஸ்பாட்டிங் என குடும்பத்துடன் குளுகுளுவென என நேரத்தை செலவழிக்க சூப்பரான மலைவாசஸ்தலமாகும். கூட்டமான ஊட்டி, கொடைக்கானலை தவித்து இந்த ஸ்பாட்டை ட்ரை செய்து பாருங்கள்.
தமிழ்நாடு-கேரளா எல்லை பகுதியில் அமைத்துள்ள சூப்பரான மலைவாசஸ்தலம் ஆனைமலை. வனவிலங்கு சரணாலயம் உள்ளதால் அடர்ந்த காடுகள், யானைகளை மற்றும் பிற வனவிலங்குகளை பார்க்கலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க கூட்டமே இல்லாத சூப்பரான இந்த இடத்தை இந்த சம்மருக்கு ட்ரிப் செல்ல மிஸ் பண்ணிடாதீங்க.
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க வயநாடு சிறந்த மலைவாசஸ்தலமாக இருக்கும். குளுகுளு கிளைமேட், வனவிலங்கு சரணாலயம் என இந்த சம்மருக்கு குடும்பத்துடன் செல்ல சூப்பரான மலைவாசஸ்தலமாகும்.
இந்தியாவின் காஃபி எஸ்டேட் கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைத்துள்ள இந்த மலைவாசஸ்தலம் எந்த கால நிலையிலும் பசுமை மாறாத குளுமையான இடமாக உள்ளது. குளுமையும், அமைதியும் நிறைந்த இந்த சுற்றுலா தலத்திற்கு இந்த சம்மர் ட்ரிப் பிளான் பண்ணுங்க.
தேயிலை தோட்டங்களால் சூழப்பட்ட குளுமையான இடம் மூணார். தமிழ்நாடு-கேரளா எல்லையில் அமைத்துள்ள இந்த இடம் சம்மருக்கு ஏற்ற சூப்பரான மலைவாசஸ்தலமாகும். குடும்பங்களுடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவழிக்க சூப்பரான இடமாகும்.
கேரளாவில் உள்ள மற்றொருமொரு சூப்பரான சுற்றுலா தலம் அகஸ்தியக்கூடம். பசுமை மாறாத மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைத்துள்ள குளுமையான இடமாகும். இந்த சம்மர் ட்ரிப் பிளான் பண்ண மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications