Home / Photos
2023 முதல் 2026 வரை.. விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய திரிஷா.. ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளான இன்ஸ்டா போஸ்ட்!
By Chandru
2023ம் ஆண்டு முதல் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி திரிஷா பகிர்ந்த இன்ஸ்டா புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@trisha
Share
விஜய்-திரிஷா, திரையில் இருவரின் காம்பினேஷன் செம சூப்பர். ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட கம்போ என்றே சொல்லலாம். இவர்களின் கூட்டணியின் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் 2004இல் வெளிவந்த 'கில்லி' திரைப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இன்றும் ரசிகர்கள் பலரின் ஃபேவரைட் படமாகவும் உள்ளது. இப்படி இருக்க சமீபத்தில் விஜய்யின் விவாகரத்து வழக்கு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2/6
Photo Credit: instagram@trisha
Share
விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக அவரது மனைவி விவகாரத்து வழக்கு தொடுத்திருந்தார். அவர் வேறு யாரும் இல்லை த்ரிஷா தான் என்றும் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் திரிஷா-விஜய்யின் செயல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின்பிறந்தநாளில் திரிஷா பகிர்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
3/6
Photo Credit: instagram@trisha
Share
2023இல் விஜய் பிறந்தலுக்கு திரிஷா ஷேர் செய்த புகைப்படம் இது. லியோ பட செட்டில் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்கள் கூறியிருந்தார்.
4/6
Photo Credit: instagram@trisha
Share
2024இல் விஜய் பிறந்தலுக்கு திரிஷா ஷேர் செய்த புகைப்படம் இது. லிப்ட்டில் இருவரும் மிரர் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.
5/6
Photo Credit: instagram@trisha
Share
கடந்தாண்டு 2025இல் த்ரிஷாவின் செல்லநாயை விஜய் கொஞ்சியபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.
6/6
Photo Credit: instagram@trisha
Share
சமீபத்தில் வந்த விஜய்யின் பிறந்தநாளன்று திரிஷா வாழ்த்துக்கள் எதுவும் கூறவில்லை, எந்தவொரு இன்ஸ்டா போஸ்டும் பதிவிடாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். விஜய்யுடன் விதவிதமான கேக்வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். தற்போது அந்த போட்டோ சோசியல் மீடியாக்களில் ஏகப்பட்ட விமர்சனங்களுடன் செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications