Home / Photos
ஊட்டியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி!
By Chandru
ஊட்டியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரியின் பதபதக்கவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
1/7
Share
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னுர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை பொலிவு இருந்துள்ளது.
2/7
Share
மிதமான மழை பொலிவு என்றாலும் வெவ்வேறு இடங்களில் சிறு சிறு நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உதகை-கோத்தகிரி நெடுஞ்சாலையில் இரவு பெய்த மழையால் சாலையின் இருபுறமும் ஈரப்பதமாக இருந்துள்ளது.
3/7
Share
சாலையின் ஓரத்தில் மரம் ஏற்றப்பட்ட லாரி நிறுத்தப்பட்டிருந்தது. ஈரப்பதம் மிகுந்த ஓரத்தில் அதிக பாரத்துடன் லாரி நின்றிருந்ததால் மண் சரிவு ஏற்பட்டு லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
4/7
Share
தேயிலை தோட்ட பள்ளத்தில் கவிழ்ந்த லாரி பலமுறை உருண்டு அடிவாரத்துக்கு சென்றது.
5/7
Share
பள்ளத்தில் கவிழ்ந்த லாரியில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
6/7
Share
பள்ளத்தில் கவிழ்ந்து பலமுறை உருண்டு அப்பளம் போல் லாரி நொறுங்கியது.
7/7
Share
லாரி பள்ளத்தில் கவிழும்போது அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். தற்போது இந்த பதிவு பார்ப்போரின் நெஞ்சை பதறவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications