Home / Photos
கல்வி விருது வழங்கும் விழா.. முதல்வர் விஜய்க்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு.. போட்டோஸ்!
By Chandru
தவெகவின் கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய்க்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு தந்தனர்.
1/9
Share
தவெக கட்சி தலைவரும், முதல்வருமான விஜய் ஆண்டுதோறும் 10,12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி பாராட்டி வருகிறார். அதன்படி இந்த ஆண்டிற்கான விருதை முதல்வர் விஜய் வழங்கி வருகிறார்.
2/9
Share
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்துகொண்ட மாணவ, மாணவி மற்றும் பெற்றோர்களுக்கு கமகம விருந்து அளிக்கப்பட்டது. பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் விருந்தை தயாரித்துள்ளார்.
3/9
Share
மாணவ, மாணவி மற்றும் பெற்றோர்களுக்கு அமைச்சர் ஆனந்த் உணவு பரிமாறினார்.
4/9
Share
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெற்றோர்களுடன் உரையாடினார்.
5/9
Share
கல்வி விருது வழங்கும் விழா நடைபெறும் ஆர்.கே. கன்வென்ஷன் சென்டருக்கு வந்த முதல்வர் விஜய்யின் புகைப்படம்.
6/9
Share
பட்டுவேட்டி சட்டையில் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய்.
7/9
Share
விழாவுக்கு வந்த முதல்வர் விஜய்க்கு மாணவர்கள் உற்ச்சாக வரவேற்பு கொடுத்தனர்.
8/9
Share
விருது வழங்கும் விழாவில் முதல் கட்டமாக திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
9/9
Share
மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.



Click it and Unblock the Notifications