கண்ணை மறைத்த காதல்.. த்ரிஷ்யம் படத்திற்கு இணையான திரில்லர்.. ஓடிடியில் இந்த மலையாள படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
திரில்லர் படம் யாருக்கு தான் பிடிக்காது? அதிலும் மலையாள திரில்லர் வேற ரோகம் என்றே சொல்லலாம். பிற மொழி திரில்லர் படமாவது நம்மை அப்சட் செய்ய வாய்ப்புள்ளது.. ஆனால் மலையாள திரில்லர் படங்கள் எந்நாளும் சினிமா ரசிகர்களை என்டர்டைன் செய்ய தவறுவதில்லை. அப்படியான தரமான திரில்லர் கதை அதனுடன் கொஞ்சம் ரொமான்ஸ் சேர்ந்திருந்தால் எப்படி இருக்கும்.. அப்படியான படத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
திரில்லர் படம்: இந்திரன்ஸ், த்யான் ஸ்ரீனிவாசன், துர்கா கிருஷ்ணா, அஞ்சனா அப்புக்குட்டன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2022இல் வெளிவந்த மலையாள திரைப்படம் 'உடல்'. ரதீஷ் ரெகுநந்தன் இயக்கியுள்ளார்.
கதை என்ன? துர்கா-ஜீட் இருவரும் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளார். துர்காவின் கணவர் ஜீட் வெளியூரில் தங்கி வேலை செய்கிறார். துர்கா தனது வீட்டில் கணவரின் கண்தெரியாத மாமனார், உடல்நிலை சரியில்லாத மாமியார் ஆகியோரை கவனித்து வருகிறார்.
உடல்நிலை சரியில்லாத மாமியாரை பார்த்து வந்த துர்காவுக்கு ஒருகட்டத்தில் சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. மற்றொரு பக்கம் தனது பள்ளி நண்பருடன் திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்து வருகிறார். அவருடன் உறவில் இருப்பது வீட்டில் உள்ளோருக்கு தெரியக்கூடாது என்பதற்காக மாமியார், மாமனாரை கொலை செய்ய திட்டமிடுகிறார்.
கொலை செய்துவிட்டு திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த இளைஞருடன் வாழ ஆசைப்படுகிறார். இருவரும் சேர்ந்து கொலையை செய்தார்களா? என்ன ஆனது? என்பதே இப்படத்தின் தரமான த்ரில் திரைக்கதை.
தரமான திரில்லர்: தரமான இந்த திரில்லர் படத்தில் நடிகர் இந்திரன்சின் நடிப்பு வேற லெவல் என்றே சொல்லலாம். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகுது என்ற எதிர்பார்ப்பை அதிகம் தூண்டும் விதமாக திரைக்கதை விறுவிறுப்புடன் நகர்கிறது.
ஓடிடி? கள்ள உறவு அதனால் குடும்பத்திற்குள் ஏற்படும் பெரிய பிரச்சனைகள் என்னென்ன என்பதை கூறும் இந்த ரொமான்டிக் திரில்லர் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.



Click it and Unblock the Notifications