Home / Photos
PHOTOS: வைப் மோடில் ரெடின் கிங்ஸ்லி.. கணவருடன் ரொமான்டிக் போஸ் கொடுத்த சங்கீதா.. வெளியான லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
By Chandru
vacation photos of comedy actor redin kingsley and his wife Sangeetha. check out the latest photos here.
1/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தனது மனைவியுடன் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து செம்ம வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
அதற்கு முன் கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி., குர்கா, சந்தானம் நடிப்பில் வெளியான ஏ1, ஜாக்ப்பாட், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை சிரிக்கவைத்த ரெடின் கிங்ஸ்லியை டாக்டர் படம் தான் பட்டித்தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகியது.
3/7
Photo Credit: instagram
Share
சினிமா ரசிகர்களை ஈர்த்த ரெடின் கிங்ஸ்லி அடுத்தடுத்து விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், வடிவேலுவுடன் நாய் சேகர் ரிடர்ன்ஸ், சந்தானத்துடன் டிடி ரிட்டர்ன்ஸ், சிம்புவுடன் பத்து தலா, ராகவா லாரன்ஸுடன் ருத்ரன், இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் என தமிழ் சினிமாவின் அனைத்து டாப் நடிகர்களுடனும் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார்.
4/7
Photo Credit: instagram
Share
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் முக்கியமான காமெடி ரோலில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.
5/7
Photo Credit: instagram
Share
மேலும் சமீபத்தில் வெளியான 80ஸ் பில்டப், நயன்தாராவின் அன்னபூரணி, சதீஷ் நடிப்பில் வெளியான கன்ஜுரிங் கண்ணப்பன் மற்றும் வா வரலாம் வா உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கியுள்ளார். செம்ம பிஸியான காமெடி நடிகராக வலம் வந்த ரெடின் கிங்ஸ்லி தனது 46வது வயதில் கடந்த டிசம்பர் மாதம் சீரியல் நடிகையை திருமணம் செய்துகொண்டார்.
6/7
Photo Credit: instagram
Share
தனது நீண்ட நாள் காதலியான சீரியல் நடிகை சங்கீதாவை மிகவும் எளிமையாக காதல் திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.
7/7
Photo Credit: instagram
Share
இந்நிலையில் கல்யாணம் முடிந்த கையேடு ரெடின் கிங்ஸ்லி தனது மனைவியுடன் ஹனிமூன் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதேபோல் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது மனைவியுடன் வெளிநாட்டில் கொண்டாடினர் ரெடின் கிங்ஸ்லி. அந்தவகையில் இருக்கும் பிளாக் அண்ட் பிளாக் ட்ரெஸ்ஸில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி ரசிகர்களின் லைக்குகளுடன் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications