காதலர் தின கொண்டாட்டம்.. தியேட்டரில் ரீ ரிலீஸாகும் ரொமான்டிக் காதல் படங்கள்.. என்னென்ன? பாருங்க!
புதிய படங்களுக்கு இணையாக ரீ ரிலீஸ் படங்கள் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் இந்த ரீ ரிலீஸ் ட்ரெண்டிங்கில் தற்போது பட தயாரிப்பாளர்கள் பலர் இணைந்துள்ளதாக தெரிகிறது. ஸ்பெஷல் நாட்களில் சூப்பர் ஹிட் படங்களை தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்து சினிமா ரசிகர்களை குஷிப்படுத்துவதுடன், வருமானத்தையும் பெருகிக்கொள்கின்றனர். அந்த வகையில் காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ள சூப்பர் ஹிட் ரொமான்டிக் காதல் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சூப்பர் ஹிட்டான படங்கள் தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்யப்படுவது தற்போதைய ட்ரெண்டாக உள்ளது. ரஜினியின் படையப்பா, விஜய்யின் கில்லி, அஜித்தின் மங்காத்தா ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஸ்டார் நடிகர்களின் படங்கள் மட்டுமல்லாமல் பிற ஹிட் படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் "எவ்வளவு நல்லா இருக்கும்" என்பதே 90ஸ் கிட்ஸின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் வரும் காதலர் தினத்தன்று தியேட்டரில் ரீ ரிலீஸாகவுள்ள ஹிட் படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
நடிகர் குணால், நடிகை சோனாலி நடிப்பில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் ரொமான்டிக் திரைப்படம் 'காதலர் தினம்'. இந்த சூப்பர் ஹிட் திரைப்படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று தியேட்டரில் ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர்களே தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மாதவன், ரீமா சென், அப்பாஸ் ஆகியோர் நடிப்பில் 2001ல் வெளிவந்த காமெடி ரொமான்டிக் காதல் திரைப்படம் 'மின்னலே'. இந்த சூப்பர் ஹிட் திரைப்படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி தியேட்டரில் ரீ ரிலீஸாகவுள்ளது.
இயக்குநர் அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் 2002ல் வெளிவந்த ரொமான்டிக் காதல் திரைப்படம் 'மௌனம் பேசியதே'. 90ஸ் கிட்ஸ் கொண்டாடிய இப்படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி தியேட்டரில் ரீ ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications