Home / Photos
குதூகலமாய் டான்ஸ் ஆடிய சரத்குமார்.. என்ட்ரி கொடுத்த திரிஷா.. களைகட்டிய வரலட்சுமி சரத்குமாரின் திருமண பங்க்ஷன்..!
By Chandru
நடிகர் சார்த்துகுமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
1/7
Share
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக வலம் வரும் சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் தான் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. தமிழ் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
2/7
Share
தமிழில் தொடங்கிய இவரின் திரை பயணம் தற்போது தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ஜொலிக்க வைத்துள்ளது. ஹீரோயினாக தமிழில் என்ட்ரி கொடுத்தாலும் ஒருகட்டத்தில் விஜய், விஷால் உள்ளிட்டோருக்கு வில்லியாக நடித்து தனது திரை பார்வையையே மாற்றிக்கொண்டார்.
3/7
Share
தமிழில் இருந்து தெலுங்கு சினிமாவுக்கு தாவிய வரலட்சுமிக்கு அங்கேயும் மவுசு குறையவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. தற்போது டோலிவுட்டில் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் நடித்து ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார்.
4/7
Share
திரையில் ஜொலித்து வரும் வரலட்சுமி, திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியமாக்கப்போவதாக தெரிவித்தார். அதன்படி சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட நாள் காதலனை அறிமுகப்படுத்தி அவரை நிச்சயமும் செய்துகொண்டார்.
5/7
Share
வரலட்சுமியின் காதலன் நிக்கோலாய் சச்தேவ் மும்பையில் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். தற்போது இவர் வரலட்சுமியை திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் மிகவும் சிம்புளாக நடைபெற்ற நிலையில் திருமணத்தை மிகவும் கிராண்டாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
6/7
Share
அதன்படி கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஸ்டார் பிரபலங்கள் பலருக்கும் திருமண அழைப்புதலை கொடுத்துத்துவந்தார், சரத்குமார். அதேபோல் பிரதமர் மோடிக்கும் மகளின் திருமண அழைப்புதலை கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.
7/7
Share
நிக்கோலாய்-வரலட்சுமியின் மெஹந்தி பங்க்ஷன் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் நேற்று சங்கீத் பங்க்ஷன் ஜோராக நடைபெற்றது. இதில் நடிகை திரிஷா உள்ளிட்ட சில திரை பிரபலங்கள் பங்கேற்று திருமண ஜோடியுடன் ஆட்டம்போட்டனர். தற்போது நிக்கோலாய்-வரலட்சுமியின் திருமண பங்க்ஷன் புகைப்படங்கள் இணையதளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications