விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா சொத்து மதிப்பு.. என்ன? இருவருக்கும் கொஞ்சம் தான் வித்தியாசமாம்? பாருங்க!
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இருவருக்கும் வரும் பிப்ரவரி 26ம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. அதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இருவரின் சொத்து மதிப்பு என்ன? யாருக்கு அதிகம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சோசியல் மீடியாக்களில் தற்போது அதிகமாக பேசப்படும் டாபிக் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் தான். ஸ்டார் நடிகர்களின் திருமணம் என்பதால் எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. 7 வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்த இருவரும் இறுதியாக திருமண பந்தத்திற்குள் இணையவுள்ளனர். இந்த நிலையில் இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாங்க சொத்து மதிப்பு என்ன என்பதை பார்ப்போம்.
விஜய் தேவரகொண்டா: 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. வெவ்வேறு ஹிட் படங்கள் கொடுத்து தெலுங்கு சினிமாவில் ஸ்டார் நடிகராக ஜொலித்து வருகிறார். நடிகராகவும் மட்டுமல்லாமல் பட தயாரிப்பாளராகவும் உள்ளார்.
ஒரு படத்தில் கமிட்டாகி நடிக்க அதிகபட்சமாக 30 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வரும் விஜய் தேவரகொண்டா, ஹைதராபாத்தில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா வைத்துள்ளார். மேலும் விலையுயர்ந்த ஆடம்பர சொகுசு கார்களும், ஒரு பிரைவேட் ஜெட்டும் வைத்துள்ளார்.
ராஷ்மிகா: நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை ராஷ்மிகா. கன்னடத்தில் தொடங்கிய இவரின் திரை பயணம் வெவ்வேறு மொழிகளில் நடித்து பான் இந்திய நடிகையாக ஜொலித்து வருகிறார்.
கீதா கோவிந்தம், புஷ்பா, சுல்தான், அனிமல், சாவா என பல ஹிட் படங்கள் கொடுத்து இந்தியளவில் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார். 5-10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வரும் ராஷ்மிகா, மும்பை, கோவா, கூர்க் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் சொந்தமாக வீடு வைத்துள்ளார். மேலும் விலையுயர்ந்த சொகுசு கார்கள், முன்னணி நிறுவங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். இந்த நிலையில் இவரின் சொத்து மதிப்பு சுமார் 66 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அதேபோல் திருமணம் செய்யப்போகும் இருவரின் சொத்து மதிப்பை சேர்ந்தால் 136 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications