முதல்வராகும் விஜய்.. கொண்டாடி மகிழும் தவெகவினர்.. போட்டோஸ்!
விஜய் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏ-களின் ஆதரவு கிடைத்த நிலையில் தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விஜய் தலைமையில் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆனால் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏ-கள் தேவை என்பதால் பெரும்பான்மையை நிரூபிக்க போராட தொடங்கினார் விஜய்.
ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காமல் தவித்து வந்த விஜய்க்கு வழி பிறந்தது.
விஜய்க்கு ஆதரவாக 5 எம்எல்ஏ-களுடன் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி சேர்ந்தது. அதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுக்க பெரும்பான்மை பெற்றார்.
அதனை தொடர்ந்து தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் ஆளுநர் விரைவில் அழைப்பு விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக ஆளுநரை சந்தித்த விஜய்.
ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஜனநாயகன் பட தயாரிப்பாளருடன் ஆளுநரை சந்தித்த விஜய்.


Click it and Unblock the Notifications