வசூல் நாயகன் விஜய்.. அதிக கலெக்ஷன் செய்த டாப் 5 படங்கள்!
நடிகரும், தமிழ்நாடு முதல்வருமான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் விஜய்யின் டாப் 5 கலெக்ஷன் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விஜய் மூன்று ரோலில் நடித்த திரைப்படம் 'மெர்சல்'. அட்லீ இயக்கிய அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வடிவேலு, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாகி 260 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
விஜய் நடிப்பில் 2023இல் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'வாரிசு'. குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப படமாக வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரூ.280 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம்,, 306 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2019இல் வெளிவந்த திரைப்படம் 'பிகில்'. விஜய் டூயல் ரோலில் நடித்து வெளிவந்த இப்படம், ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாகி 321 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
2024இல் விஜய் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் 'கோட்'. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இப்படம், 380 கோடி பட்ஜெட்டில் உருவாகி 440 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
இறுதியாக, விஜய்யின் திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக 'லியோ' உள்ளது. லோகேஷ் இயக்கிய இப்படம், ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகி 615 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. அதேபோல் விஜய் இறுதியாக நடித்த 'ஜனநாயகன்' எப்போ ரிலீசாகும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications