கடந்த 5 வருடங்களில் ரிலீஸான விஜய் திரைப்படங்கள்.. என்னென்ன? செய்த வசூல் எவ்வளவு? ஒரு பார்வை!
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் விஜய், தனது திரைப்பயணத்திற்கு புல்ஸ்டாப் வைத்துவிட்டு அரசியலில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் வரும் 2026ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மலேசியா வாழ் தமிழர்கள் விஜய்க்கு உற்ச்சாக வரவேற்பு அழைத்தனர். அந்நிகழ்ச்சியில் தனது திரை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மக்கள் பணியை தனது முழுநேர பணியாக தொடரவுள்ளேன் என தெரிவித்துள்ளார். என் வளர்ச்சிக்கு துணையாக ரசிகர்கள் இருந்தனர். அவர்களின் வளர்ச்சிக்கு துணையாக நான் இருப்பேன் என தெரிவித்துள்ளார். விஜய்யின் இறுதிப்படமாக ஜனநாயகன் இருக்கும் நிலையில் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள படத்தை தீபாவளியாக கொண்டாடவேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 5 வருடங்களில் ரிலீஸான விஜய் படங்கள் என்னென்ன? அதன் வசூல் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
லோகேஷ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் 2021ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'மாஸ்டர்'. JD என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்பட்டது. 135 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் சுமார் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'பீஸ்ட்'. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தியேட்டரில் ரிலீஸாகி விமர்சனத்தில் செம அடிவாங்கியது. விஜய் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை இருப்பினும் வசூலில் வெற்றி கண்டது. அந்த வகையில் 130 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம், 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
வம்ஷி இயக்கத்தில் 2023ல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக ரிலீசான திரைப்படம் 'வாரிசு'. பெரும் ஹைப்பை உருவாக்கிய இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் ஒரு டிவி சீரியல் என்றும் விமர்சிக்கப்பட்டது. 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
இயக்குநர் லோகேஷ் கூட்டணியில் ரிலீஸான மற்றுமொரு சூப்பர் ஹிட் திரைப்படம் 'லியோ'. விஜய் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த இப்படம் விமர்சனத்திலும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 350 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம், 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து செம ஹிட்டானது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் மூன்று ரோலில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'கோட்'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. அந்த வகையில் 350-400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 460 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
இறுதியாக, எச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. 2026 பொங்கலுக்கு செம எதிர்பார்ப்புடன் ரிலீஸாகவுள்ள ஜனநாயகன், 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் வசூல் வேற லெவல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications