Home / Photos
பிளிறும் யானைகள்+ வாகை பூ.. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார் விஜய்.. குஷியில் ரசிகர்கள்.. போட்டோஸ்!
By Chandru
நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் காட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று ரசிகர்களின் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/9
Share
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்துள்ளார்.
2/9
Share
கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய், கட்சி தொடங்கியதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
3/9
Share
கட்சி தொடங்கியதை அடுத்து வரும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தவெக போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.
4/9
Share
இருப்பினும் கட்சிக்கான கொடி மற்றும் சின்னத்தை அவர் அறிவிக்கவில்லை. 10, +2ம் வகுப்பில் நல்ல மார்க் வாங்கிய மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் பரிசுகளை கொடுத்து ஊக்கப்படுத்திவந்தார்.
5/9
Share
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் இன்று அறிமுகப்படுத்துவர் என்று கூறப்பட்ட நிலையில் இன்று விஜய் ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக அறிமுகப்படுத்தினார்.
6/9
Share
கட்சி கொடியை அறிமுகப்படுத்தியதுடன், கட்சி பாடலையும் வெளியிட்டார்.
7/9
Share
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை செயலகத்தில் விஜய், கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டுள்ளார்.
8/9
Share
நட்சத்திரங்கள் கொண்ட வட்டத்திற்குள் வாகை மலரும், இருபக்கமும் பிளிறும் யானையின் படமும் கொடியில் இடம் பிடித்துள்ளது.
9/9
Share
சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும் தவெக கட்சியின் கொடி அரசியல் காட்சி தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கவனத்தையும் அதிகம் ஈர்த்துள்ளது. தற்போது விஜய், தவெக கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய புகைப்படங்கள் இணையத்தளத்தில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications