விஜய்யின் 'நண்பன்' பட நடிகையா இவங்க? தாயான பிறகு ஆளே மாறிட்டாங்களே? போட்டோஸ்!
விஜய்யின் நண்பன் பட நடிகை தற்போது எப்படி உள்ளார்? குழந்தைக்கு தாயான பின்னர் அவரின் தோற்றத்தில், வாழ்க்கையில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் புகைப்படத்துடன் பார்ப்போம்.
இடுப்பழகை காட்டி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனத்தில் குடியேறியவர் நடிகை இலியானா. தொடையழகி ரம்பாவை போல் இடுப்பை காட்டி இளைஞர்கள் கூட்டத்தை இலியானா மயக்கியுள்ளார்.
தெலுங்கு சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இலியானா, 'கேடி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி என ஆல் ஏரியாவிலும் ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார். விஜய்யின் நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ஆடியன்ஸின் கவனம் ஈர்த்தார்.
ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வந்த இலியானா, திருமணம் செய்துகொள்ளாமலே தான் கர்ப்பமாக இருக்கிறேன் எனவும் பேபி பம்ப் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
பின்னர் 2023இல் மைக்கேல் டோலன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இலியானாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் படங்கள் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். கணவருடன் நேரத்தை செலவிடுதல், குழந்தைகளை கவனித்து கொள்ளுதல் என குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் என்ஜாய் செய்து வருகிறார்.
இலியானா இறுதியாக நடித்த திரைப்படம் 2024இல் வெளிவந்த 'Do Aur Do Pyaar' என்ற ஹிந்தி படமாகும். அதன்பின்னர் சினிமா பக்கம் ஆளையே காணோம்.
இந்த நிலையில் சினிமாவுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்த இலியானா, தனது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அதில், தலைமுடி அங்கும் இங்கும் நரைத்து போய் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.
ஒருகாலத்தில் எப்படி இருந்த நடிகை இப்போ இப்படி மாறிட்டாங்களே என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மீண்டும் எப்போது திரையில் பார்க்கப்போகிறோம் என ஏக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் இலியானாவின் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications