வசூலை வாரி குவிக்கும் விஜய் சேதுபதியின் 'பத்தா'.. 4 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு பாத்தீங்களா?
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'பத்தா' கடந்த லாங் வீக் எண்டு நாட்களான நான்கு நாட்களில் செய்த வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விஜய் சேதுபதியை வைத்து ஏற்கனவே ஹிட் அண்ட் பிளாப் கொடுத்த இயக்குநர் பாலாஜி தரணிதரன். 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' மற்றும் 'சீதக்காதி' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார்.
தற்போது மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து 'பத்தா' படத்தை இயக்கியுள்ளார். அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளார். அதேபோல் இப்படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார், சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கதை சுருக்கம்: பொதுமக்களை அலறவிடும் டானுக்கே தண்ணிகாட்டும் பள்ளி சிறுவனின் கதை.. ஆக்ஷன், கலகலப்பான காமெடி ஜானரில் வெளிவந்த ஃபீல் குட் படமாகும்.
கடந்த ஆக்டொபர் 1ம் தேதி தியேட்டரில் ரிலீஸான 'பத்தா', முதல் நாள் முதல் ஷோவில் இருந்து ரசிகர்கள் கூட்டத்தை ஈர்க்கத் தொடங்கியது. தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் பெறத் தொடங்கிய நிலையில் தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பட்ஜெட்: பாசிட்டிவ் விமர்சனங்களுடன், வசூலிலும் மாஸ் காட்டி வரும் பத்தா, 28 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.
வசூல்: முதல் நாளில் இருந்து வசூல் வேட்டை நடத்தி வரும் இப்படம், கடந்த 4 நாட்களில் 12 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications