தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்த விஜய்.. போட்டோஸ் பாத்தீங்களா?
ஈரோட்டில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்த போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் இன்று ஈரோட்டில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தவெக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஈரோடு மட்டுமன்றி திருப்பூர், ஓசூர், கோவை, சேலம் மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் தவெக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூரை போல் பெரும் அசம்பாவிதம் நடைபெற்றுவிடக்கூடாது என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல் தவெகவினருக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய தவெக தலைவர் விஜய், பேசிமுடித்தபின் தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய் அந்த வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ பதிவு சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications