Home / Photos
வசூல் மன்னனாக தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைக்கும் விஜய்.. டாப் 5 பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ!
By Chandru
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வசூலில் கல்லாகட்டிய விஜயின் டாப் 5 திரைப்படங்கள் எது எது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Share
1996ம் ஆண்டு இயக்குநர் விக்ரமன் நடிப்பில் வெளியான படம் பூவே உனக்காக. 90 காலகட்டத்தின் இறுதியில் விஜயின் திரை பயணம் ஏற்றத்தை கண்டது. அதன் ஆரம்பமாக தான் பூவே உனக்காக திரைப்படம் வெளியாகி சுமார் 270 நாட்கள் தியேட்டரில் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. விஜயின் வசூல் சாதனை இப்படத்தில் இருந்து தொடங்கியது. சுமார் 8 கோடி ரூபாய் வசூல் செய்து தனது பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை தொடங்கினார்.
2/5
Share
விஜயின் சினிமா வாழ்க்கையில் மிக பெரிய சக்ஸஸ் படம் எது என்று கேட்டல் அது கில்லி படம். எத்தனையோ வெற்றி படங்கள் இருந்தாலும் கில்லி திரைப்படம் வசூலிலும், விமர்சனத்திலும் அமோக வெற்றி பெற்றது. 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. மேலும் சமீபத்தில் கில்லி திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை செய்தது. இதன் மூலம் தான் ஒரு வசூல் மன்னன் என்பதை விஜய் நிரூபித்துவிட்டார்.
3/5
Share
ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து 100 கோடி வசூல் சாதனை செய்து வந்த விஜய் முதன் முறையாக 200 கோடி ரூபாய் வசூலை கண்டது மெர்சல் படத்தின் மூலமாக தான். அட்லீ இயக்கத்தில் வெளியான இப்படம் 250 கோடி ரூபாய் வசூல் செய்து தென்னிந்தியாவை அதிரவைத்தது. இன்னும் சொல்லப்போனால் இவரின் அரசியல் வருகைக்கு இப்படம் பெரிதும் உதவியது.
4/5
Share
மெர்சல் மூலம் 250 கோடி ரூபாய் வசூலை ருசித்த விஜய், இது போதாதென 300 கோடிக்கு டார்கெட் செய்தார். அதன்படி மீண்டும் அட்லீயுடன் கூட்டணி அமைத்து பிகில் திரைப்படத்தில் டூயல் கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் வெளியாகி 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.
5/5
Share
விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சனம் ரீதியாக கொஞ்சம் அடிவாங்கியது, இருப்பினும் படம் வசூலில் கல்லாகட்டியது. உலகம் முழுவதும் வெளியாகி சுமார் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.


Click it and Unblock the Notifications