Home / Photos
விஜய் டிவி பிரியங்கா வீட்டில் கேட்கப்போகும் குவா குவா சத்தம்.. மகிழ்ச்சியுடன் பகிர்ந்த வீடியோ.. வாழ்த்தும் ஃபேன்ஸ்!
By Chandru
விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே தான் கர்ப்பமாக இருப்பதை செம மகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
1/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
அனைவருக்கும் பிடித்தமான தொகுப்பாளினியாக சின்னத்திரையில் வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கலகலப்பான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். இவர் இல்லாமல் விஜய் டிவி இல்லை விஜய் டிவி இல்லாமல் ப்ரியங்கா இல்லை என்றே சொல்லலாம். பெரும்பாலான விஜய் டிவி நிகழ்ச்சியை கலகலவென தொகுதி வழங்கி வரும் இவர், தற்போது ஹேப்பி நியூஸ் ஒன்றை கூறியுள்ளார்.
2/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
2016ம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார் ப்ரியங்கா. சில வருடங்கள் ஹேப்பியாக சேர்ந்து இருந்தனர். திடீரென இருவருக்குள் மனக்கசப்பு ஏற்படவே கணவரை விட்டு பிரிந்து தனது அம்மாவுடன் வாழ்ந்து வந்தார்.
3/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
2022இல் பிரவீனை விவாகரத்து செய்த ப்ரியங்கா கடந்தாண்டு பிரபல தொழிலதிபரான வாசி சசி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். பிரண்ட்ஷிப்பாக தொடங்கிய இவர்களின் உறவு நாளடைவில் காதலாக மாறி திருமண பந்தத்தில் இணைந்தனர்.
4/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கையில் பிஸியாகி விடுவார், டிவி நிகழ்ச்சிகளில் இருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் தனக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளினி வேலையை விடவில்லை. நேரம் கிடைக்கும்போது கணவருடன் வெளிநாட்டிற்கு டூர் சென்று வருவதை வழக்கமாகிக்கொண்டார்.
5/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
ப்ரியங்காவுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை வீடியோ மூலம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். வழக்கம் போல் சுட்டித்தனமாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@Priyanka Deshpande
Share
கணவருடன் சேர்ந்து தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கூறிய நிலையில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ப்ரியங்காவுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications