Home / Photos
PHOTOS: 200 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள் எவை தெரியுமா? யப்பா இத்தனை படங்களா!
By Chandru
list of vijayakanth movies which crossed above 200 days. check out the full details here.
1/8
Share
ரசிகர்களால் அன்போடு 'கேப்டன்' என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். வெறும் அடைமொழிக்கு மாட்டும் கேப்டன் இல்லை உண்மையான ஒரு கேப்டனாக செயல்பட்டு துவண்டுகிடந்த தமிழ் திரையுலகை தனி ஒரு ஆளாக முன்னெடுத்து கொண்டுவந்தவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இவர் தான். ரஜினியும், கமழும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துக்கொண்டவர் விஜயகாந்த்.
2/8
Share
திரைப்படங்களை தாண்டி அனைவராலும் லைக் செய்யப்பட்ட அற்புதமான மனிதர் விஜயகாந்த். டாப் நடிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவந்த இந்த தமிழ் சினிமாவின் பார்வையை முற்றிலுமாக மாறியவர். டெக்னீசியன், ஃபைட்டர்ஸ், துணை நடிகர்கள் என கேமரா பின்னல் உள்ளவர்களையும் அங்கீகரித்தார். படங்களில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தான் ஒரு கிங் என்பதை நிரூபித்தும் காட்டினார். தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றல் முதல் ஆளாக முன்வந்து நிற்பவர் தான் நம்ப கேப்டன். இப்படியாக மக்களின் செல்லப்பிள்ளையாக, மகனாக வலம் வந்த விஜயகா
3/8
Share
திரைப்படங்களை பொறுத்தவரை இன்றெல்லாம் ஒரு படம் 30 நாட்கள் ஓடினாலே பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் அப்போவே விஜயகாந்தின் பல படங்கள் 200 நாட்களுக்கும் மேல் தியேட்டரில் ஓடி சாதனை படைத்துள்ளது. அதன்படி 200 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள் எவை எவை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
4/8
Share
ஐந்தாம் இடம்: வானத்தைப்போல: இயக்குநர் விக்ரம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான படம் வானத்தைப்போல. கேப்டன் விஜயகாந்த், பிரபுதேவா, மீனா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, அஞ்சு அரவிந்த், வினிதா, செந்தில், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இப்படம் சுமார் 200 நாட்களும் மேல் திரையரங்குகளில் ஓடியது.
5/8
Share
நான்காம் இடம்: புலன் விசாரணை: இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான படம் புலன் விசாரணை. விஜயகாந்த், ரூபினி, நம்பியார், ராதாரவி, ஆனந்த் ராஜ், சரத்குமார், செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியானது. இப்படம் வெளியாகி சுமார் 220 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடியது.
6/8
Share
மூன்றாம் இடம்: மாநகர காவல்: இயக்குநர் எம். தியாகராஜன் இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான படம் மாநகர காவல். விஜயகாந்த், நடிகை சுமா, நாசர், ஆனந்த் ராஜ் ,நம்பியார், செந்தில், தியாகு, சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் தமிழகத்தில் சுமார் 230 நாட்களுக்கு மேல் ஓடியது. போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்தின் நடிப்பு மக்களை பெரிதும் ஈர்த்து. மேலும் அந்த காலகட்டத்தில் அதிக வசூல் செய்த படம் இதுவாகும்.
7/8
Share
இரண்டாம் இடம்: கேப்டன் பிரபாகரன்: இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்தின் 100வது படமாக இப்படம் வெளியாகி மெகா ஹிட் படமாக மாறியது. தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத வரவேற்பு விஜயகாந்தின் 100வது படத்திற்கு கிடைத்தது. இப்படம் சென்னை காசி தியேட்டரில் வெளியாகி சுமார் 300 நாட்களுக்கும் மேல் ஓடியது.
8/8
Share
முதல் இடம்: சின்ன கவுண்டர்: இயக்குநர் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான படம் சின்ன கவுண்டர். ரஜினி, கமல் இருவரும் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் பொது மக்களின் முன்னதில் தனி இடத்தை அமைத்துக்கொண்டவர் விஜயகாந்த். இவரின் சின்ன கவுண்டர் திரைப்படம் வெளியாகி சுமார் 315 நாட்களுக்கு மேல் ஓடியது. விஜயகாந்த் படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுவாகும்.


Click it and Unblock the Notifications