ஆசிய போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற வித்யா ராமராஜ்.. நெகிழ்ச்சி போட்டோஸ்!
ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. அதில் மொத்தம் 46 நாடுகள் கலந்துகொண்டு போட்டிகளை எதிர்கொண்டு வருகின்றன. கடந்த செப் 19ம் தேதி தொடங்கி ஆக்டொபர் 4ம் தேதி வரை ஆசிய விளையாட்டு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்து தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் புது சாதனை படைத்துள்ளார். பெண்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 55.41 வினாடிகளில் கடந்து வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 40 ஆண்டுகளாக நீடித்து வந்த பி.டி.உஷாவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
27 வயதான வித்யா ராமராஜ் கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள வழுக்குப்பாறை ஊராட்சி மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்ராஜ்-மீனா தம்பதியரின் மூன்றாவது மகள் ஆவார். வித்யாவின் அப்பா ராம்ராஜ் கோவையில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். வித்யா மூன்று பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ந்துள்ளார்.
பதக்கங்கள்: * 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம் - வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்தார். * 4x400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டம்- வெள்ளி பதக்கம். * பெண்கள் 4x400 தொடர் ஓட்டம்- தங்கப் பதக்கம் என மொத்தம் மூன்று பதக்கங்கள் வென்றுள்ளார். மேலும் ஒரே ஆசிய விளையாட்டு போட்டியில் மூன்று பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
லாரி ஓட்டுனரின் மகள் வித்யா தனது விடாமுயற்சி, தீவிர பயிற்ச்சியின் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். முதல்வர் விஜய் மற்றும் தமிழக மக்கள் வித்யாவை கொண்டாடி வருகின்றனர். தற்போது வித்யா 3 பதக்கங்களுடன் இருக்கும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரை இந்தியா 6 தங்கம், 22 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 54 பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டு போட்டி பட்டியலில் 10ம் இடத்தை பிடித்துள்ளது.



Click it and Unblock the Notifications