கடைநிலை காவலர்கள் படும் அவஸ்தை.. எதார்த்தத்தை சொல்லும் வெப் தொடர்.. என்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
ஓடிடி பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக தரமான திரில்லர் வெப் தொடர் ஒன்று உருவாகியுள்ளது. அது என்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பதை வாங்க பார்ப்போம்.
த்ரில் தொடர்: கற்பனையாக உருவாக்கப்படும் கதைகளை விட நம் வாழ்வில் நாம் சந்திக்கும் சில சம்பவங்களை தழுவி உருவாக்கப்படும் த்ரில் கதைகள் மிகவும் சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும். அப்படியாக உருவாக்கப்பட்ட தொடர் தான் 'வாரண்ட்'.
பிரசாந்த் பாண்டியராஜ்: விமல் நடிப்பில் வெளிவந்த 'விலங்கு' வெப் தொடரை இயக்கி சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். சஸ்பென்ஸ், திரில்லர், கொஞ்சம் காமெடி ஜானரில் வெளிவந்த விலங்கு சீரிஸ் அமோக வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து சூரி நடிப்பில் வெளிவந்த 'மாமன்' படத்தை இயக்கி மீண்டும் வெற்றி கண்டார்.
படக்குழு: பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி, நடித்த வெப் தொடர் 'வாரண்ட்'. இத்தொடர் மூலம் பிரசாந்த் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். பாலாஜி சக்திவேல், கவுசல்யா, அருள்தாஸ், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
கதை என்ன? நாயகன் பிரசாந்த் பாண்டியராஜ் அவரது தந்தையின் ஒரே ஒரு செல்ல பிள்ளையாக உள்ளார். பிரசாந்த் எப்படியாவது அரசு வேலைக்கு சென்றுவிடவேண்டும் என்பதே அவரின் தந்தையின் ஒரே ஆசையாக உள்ளது. இதற்காக பிரசாந்த் இரவும் பகலுமாக முயற்சித்து ஒவ்வொரு அரசு தேர்வையும் எழுதிவருகிறார்.
வெவ்வேறு அரசு தேர்வுகளை கஷ்டப்பட்டு எழுதி வரும் பிரசாந்துக்கு தோல்வியே மிச்சம். இதனால் பிரசாந்தின் தந்தை காவல் துறையில் வேலை செய்யும் உறவினர் ஒருவரின் உதவியோடு அவரை காவல்துறை பணியில் சேர்த்துவிடுகிறார். பிரசாந்தோ கடைநிலை காவலராக வேலையில் சேர்ந்து வேலை பார்த்து வருகிறார்.
காவல்துறை பணிகளை புரிந்துகொள்வதிலும், காவல் நிலையத்தில் நடக்கும் அரசியலையும் புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கும் பிரசாந்த், தனது சீனியர் காவல்துறை அதிகாரிகளால் அவமானப்படுதிகப்படுகிறார். ஒரு கட்டத்தில் வேலையே வேண்டாம் என்ற முடிவுக்கு வருகிறார். வேலையில் இருந்து வெளியேற அவர் செய்யும் சில விளையாட்டான செயல்கள் அவருக்கே வினையாக மாறிவிடுகிறது. கடைநிலை காவலர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? சவால்கள் என்ன? என்பதே இத்தொடரின் சுவாரசிய கதைக்களம்.
ஓடிடி: பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கமும், நடிப்பும் சினிமா ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது. சுவாரசியம் நிறைந்த இத்தொடரை ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடவே பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications