OTT: வீக் எண்டு விடுமுறைக்கு ஏற்ற.. டாப் 5 மலையாள க்ரைம், திரில்லர் திரைப்படங்கள்.. எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய மலையாள க்ரைம், திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன? எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சுரேஷ் கோபி, கோகுல் சுரேஷ் நடிப்பில் 2022ல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Paappan'. இந்த வீக் எண்டு இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
நயன்தாரா, மம்மூட்டி நடிப்பில் 2016ல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Puthiya Niyamam'. த்ரில்லிங் காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
ஷைன் டாம் சாக்கோ நடிப்பில் 2023ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Kurukkan'. இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2021ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் மலையாள திரைப்படம் 'Operation Java'. சைபர் வழக்கு விசாரணையும் அதனை சுற்றி நகரும் சுவாரசிய கதையே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மம்மூட்டி நடிப்பில் 2018ல் வெளிவந்த தரமான க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Street Lights'. குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியான மம்மூட்டி, மர்மமான கொலை வழக்கு விசாரிக்கையில் ஏற்படும் திருப்பங்கள், ட்விஸ்ட் காட்சிகள் பற்றிய கதைக்களம். இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications