Home / Photos
கல்லீரலை பாதிக்கக்கூடிய ஹெபடைடிஸ் வைரஸ் பரவாமல் தடுக்க என்ன செய்யலாம்..?
கல்லீரலின் வீக்கத்தை குறிக்கிற ஹெபடைடிஸ் பல வைரஸ்களால் ஏற்படுகிறது. இது கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். மோசமான சுகாதாரம் உள்ள பகுதிகளினால் அதிகம் பரவக்கூடிய இந்த வைரஸ் தொற்றை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
1/9
Share
ஹெபடைடிஸ் வைரஸ் தோற்று நோய் ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாமல் இருக்கலாம், ஆனால் இந்நோய் அதன் தீவிர நிலையை அடைந்தவுடன் தான் அறிகுறிகள் முழுமையாக வெளிப்படும். அப்படியான சமயங்களில் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
2/9
Share
ஹெபடைடிஸ் அழற்சியை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களில் ஏ (HAV), பி (HBV), சி (HCV), டி (HDV), இ (HEV) என 5 வகைகள் உள்ளன. ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ ஆகியவை குறுகிய கால நோய்களாகும். அதேபோல், ஹெபடைடிஸ் பி, சி, டி ஆகியவை நீண்டகால வகை நோய்களாகும்.
3/9
Share
ஹெபடைடிஸ் ஏ அசுத்தமான நீர் மற்றும் உணவு வழியாக பரவுகின்றன. ஹெபடைடிஸ் பி பாலியல் உறவு மூலம் பரவுகிறது. இது கல்லீரல் திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஹெபடைடிஸ் சி இரத்தம் மூலம் பரவுவதால், பாதிக்கப்பட்ட இரத்தத்துடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும்.
4/9
Share
ஹெபடைடிஸ் டி ஆனது பி வகை வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே ஏற்படுகிறது. அதனால்தான் ஹெபடைடிஸ் பி தடுப்புக்கான தடுப்பூசிகள் ஹெபடைடிஸ் டி நோய்த்தொற்றை தடுக்கவும் பயன்படுத்தப்படலாம்.
5/9
Share
சோர்வு, பசியின்மை, காய்ச்சல், தசை அல்லது மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, எடை இழப்பு போன்றவை இந்நோயின் பொதுவான அறிகுறிகளாகும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இந்த கல்லீரல் நோய்த்தொற்றானது, அதிகமாக ஹெபடைடிஸ் B வைரஸால் ஏற்படுகிறது.
6/9
Share
ஹெபடைடிஸ் பி ஆனது வயதானவர்களில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே அறிகுறி உணர்ந்து பாதிப்பை அறிந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
7/9
Share
ஹெபடைடிஸ் B தடுப்பூசி அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த 24 மணி நேரத்திற்குள் கொடுக்கப்பட வேண்டும் என்று WHO பரிந்துரைக்கிறது. இந்நோய்த்தொற்று பரவக்கூடிய பொதுவான வழிகளை இப்போது பார்ப்போம்.
8/9
Share
மோசமான சுகாதாரத்துடன் வீடற்ற நிலையில் வசிப்பவர்கள் இந்த தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளனர். ஹெபடைடிஸ் வராமல் தடுக்க தடுப்பூசி போடுவது கட்டாயம் ஆகும். அதோடு சோப்பு மற்றும் தண்ணீருடன் கைகளை நன்றாக கழுவவும். பயணம் செய்யும்போது சுகாதாரமான நீரை குடிக்கவும்.
9/9
Share
ஹெச்பிவி பாதிக்கப்பட்ட ஒருவருடன் ஆணுறை அல்லது தடுப்பு முறை இல்லாமல் உறவு கொள்வது, முத்தம் கொடுப்பது, பற்களில் இரத்தக்கசிவு இருப்பவர்களின் பிரஷ்-ஐ பயன்படுத்துவது, சுத்தம் செய்யாத உபகரணங்களுடன் பச்சை குத்துதல், தும்மல், இருமல் போன்ற பல காரணிகளால் இந்நோய்த்தொற்று பரவக்கூடியது என்பதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications